பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£8 கலைச் செல்வி

வரும்படியுள்ள மடம் அன்று. உண்மையைச் சொல்லப் போகுல் ஸ்வாமிகள் பட்டத்திற்கு வரும்போது ஒரு லக ரூபாய் கடன் மூட்டை மடத்தின் கிர்வாகத்தை அமிழ்த்திக்கொண்டிருந்தது. வருவாயோ இருபதியிைரத் துக்குள் அடங்கி கின்றது. அதனேயும் ஒழுங்காகத் தொகுக்கும் வகையில்லை. ஏதோ அந்த தர்பாராக மடத் தின் கிர்வாகம் காரியஸ்தர்களின் மனம் போன போக்கிலே முன்பெல்லாம் நடைபெற்று வந்தது. மடாதிபதியோ வெறும் பொம்மையாக இருந்தார். அவருக்குத் தனி மனி தர் என்ற முறையில் வேண்டிய போகங்களெல்லாம். கிடைத்து வந்தன. அதற்குமேல் மடத்தைப்பற்றியோ, சைவத்தைப்பற்றியோ, உலகத்தைப்பற்றியோ அவருக் குக் கவலை இல்லை. மடத்துக் காரியஸ்தர்கள் வைத்தது சட்டமாக இருந்ததில் என்ன ஆச்சரியம்?

கலியுகம் மறைந்து கிருதயுகம் வக்கதுபோல ஆயிற்று, இந்த ஞான தேசிக பரமாசாரிய ஸ்வாமிகள் பட்டத்திற்கு வத்தது. வ வர இவர் செய்த ஏற்பாடுகள் மடத்தின் வருவாயையும் மதிப்பையும் உயர்த்தின. தக்கபடி வேலை செய்யும் நிர்வாகிகளே கியமித்துப் பழைய பெருச்சாளி களையெல்லாம் விலக்கி விட்டுப் புதிய கணக்குகளையும் சம்பிரதாயங்களையும் அமைத்து ராஜாங்கத்தைப்போல கிர்வாகம் கடக்கும்படி செய்தார்.

இயற்கையாக மடத்துக்கு இருந்த வருவாயோடு புதிய வருவாய்களும் சேர்ந்தன. ஸ்வாமிகளுடைய கல்வி, ஒழுக் கம், கிர்வாகம் ஆகியவற்றைக் கண்ட பலர் ஞானமங்கல் மடத்துச் சிஷ்யர்களானர்கள். ஸ்வாமிகளுக்குப் பொன். குலும் மணியாலும் நிலத்தாலும் கலத்தாலும் காணிக்கை செலுத்தினர்கள். தேசாடனத்தில் அவரை உபசரித்து