பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுவிய பழம் 翻岛

மகேசுவ பூஜை நடத்திச் சபைகளைக் கூட்டுவித்து இன் பம் அடைந்தார்கள். இத்தனை காரியங்களாலும் மடத் தின் பொருளும் புகழும் உயர்ந்தன. ஸ்வாமிகள் பட்டத் திற்கு வந்து பத்து வருஷங்களுக்குள் பழைய கடன் தீர்ந்துவிட்டதென்ருல், அவருடைய கிர்வாகத் திறமைக்கு வேறு என்ன சாட்சி வேண்டும் ?

2

வருஷத்தில் பதினுெரு மாதங்கள் வெளியூர்ப் பிரயா ணத்தில் இருக்கும் மடாதிபதி, ஆதீன மூல புருஷருடைய குருபூஜைக்கு மாத்திரம் ஞானமங்கலத்துக்கு எழுந்தருளி ஒரு மாதம் தங்குவார். .

அடுத்த சித்திரை மாதம் குருபூஜை வாப் போகிறது;

மாசி பங்குனியிலே அதற்குரிய கிட்டம் தயாராகிவிட்டது. வாவா கிர்வாகம் அதிகமாவதால் மடத்தில் உத்தியோகம் பார்ப்பவர்கள் போதவில்லை. இன்னும் சில் தக்க அறி வாளிகளே ராயச வேலைக்கும் தேவஸ்தான வேலைக்கும் காறுபாறு வேலைக்கும் நியமிக்க வேண்டியிருந்தது. அப் படி நியமிக்கும் விஷயத்தில் மடாதிபதியே நேரில் கண் டறிந்து திருப்தியடைந்தால்தான் ஒருவரை நியமிப்பார் கள். மடாதிபதியும் போகும் இடங்களில் தரிசனத்துக்கு வருபவர்களில் மடத்து உத்தியோகம் பார்க்கத் தகுதியுள். ளவர் யாராவது இருக்கிருரா என்று கவனிப்பது உண்டு. சில கோம் பார்த்துப் பேசிய மாத்திரத்திலே மனிதருடைய இயல்பையும் திறமையையும் அளவெடுக்கும் அதிமேதை யாகையால் அவர் கண்ணுக்கு முன்னே கிற்பவரின் சொரு பம் எக்ஸ்ரே படம் பிடித்ததுபோல உள்ளும் புறம்பும்

நன்ருகத் தெரியும்.