பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 கலைச் செல்வி

இந்த ஆராய்ச்சிக் கண்ணுக்குச் சிவஞானம் எதிர்ப் பட்டான். துறையூரில் ஞானதேசிகர் எழுந்தருளியபோது அந்தப்பிள்ளையாண்டான் கூட்டத்தோடு கூட்டமாக வந்து நமஸ்காரம் செய்தான். அவன் முகத்திலே பர்ல் வடிக் தது. நெற்றியில் அணிந்திருந்த திருநீறு தனிச் சோபை யுடன் பிரகாசித்தது. அவன் கழுத்தில் வெறும் சிவப்புச் கயிற்றில் கோத்து அணிந்திருந்த ஒற்றை ருத்திராட்சம், பொன்னிலே பதித்த வைரத்தைப்போலத் தக்க இடத் கிலே அமைந்திருக்கிறதென்று சொல்லும்படி அழகாக இருந்தது.

அவனைக் கண்டதுமே ஞானதேசிகருக்கு அருள் பிறந்தது. : -

'நீ யார், அப்பா' என்று அன்போடு விசாரித்தார். "அடியேன் இந்த ஊர்தான். சமரபுரி முதலியா ருடைய தம்பி.' - என்ன வகை' 'தொண்டைமண்டல முதலியார்." 'தகப்பனர் இவ்வூரில் இருக்கிருரா?”

அவர்கள் காலமாகிவிட்டார்கள். அடியேன் தமைய குரே தகப்பளுரைப்போல அடியேனப் பாதுகாத்து வரு கிரு.ர்கள். , ,

மேலே விசாரணை நடத்தியதில் சிவஞானம் காலாவது பாரம் வரையில் ஆங்கிலம் படித்தவனென்றும், தமிழில் ஒரளவு நல்ல தேர்ச்சி உள்ளவனென்றும், தேவாரம் இனிமையாகப் பாடுவானென்றம் மடாதிபதி தெரிந்து கொண்டார். - - -

"மடத்தில் வேலை பார்க்க வருகிருயா? தக்க சம்ப எம் கொடுக்கச் சொல்கிருேம். - - - - - - -