பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுவிய பழம் 霹盖

"அடியேன் பாக்கியம். மகா சங்கிதானத்தின் கட்டளை யைச் சிரசின்மேல் தாங்கி நடக்கக் காத்திருக்கிறேன்’ ன்ன்ருன் சிவஞானம். ... " உடனே பண்டார சக்கிதி அவனுக்கு ராயச வேலே கொடுத்துவிட்டார். சில காலம் யாத்திரையில் சம்முடன் இருந்து, வேலை பார்த்துப் பிறகு ஞானமங்கலத்துக்குப் போய் வேலை செய்யலாம்' என்று உத்தரவாயிற்று. அப் படியே அவன் யாத்திரைக் காலத்தில் பண்டா சங்கிதி யின் கணக்கு வழக்கைப் பார்க்கும் காரியஸ்தருக்கு உதவி யாக அமர்ந்து வேலை பார்த்து வந்தான்.

பணிவும், புத்திசாலித்தனமும், கண்கவர் தோற்ற மும், உள்ள அவனிடம் பண்டார் சக்கிதியின் உள்ளம் பதிந்தது. துறவியாகிய அவர் பற்றற்ற உள்ளத்தோடு, இருக்கவேண்டுமென்று சங்கற்பம் செய்துகொண்டவர். கூடியவரையில் அப்படியே இருக்க முயல்பவர். அதல்ை தான் அவர் தம் ஒழுக்கத்தைப் பாதுகாத்து வர முடிந்தது. இப்போது இந்தப் பிள்ளையின்மேல் அவரையும் அறியா மல் ஒரு வகையான பாசம் தலைக்கொண்டது.

போகும் ஊர்களிலெல்லாம் மடாதிபதியின் பிரசங், கங்கள் நடைபெறும் மிகவும் கடினமான சாஸ்திர விஷ் பங்களே உதாரணங்களின் மூலமாக எளிதில் விளக்குபவர் அவர். அவருடைய பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். சிவஞானம் அந்தப் பிரசங்கங்களே. ஒன்று விடாமல் கேட்பான். -

ஒவ்வொரு நாளும் பிரசங்கம் முடிந்த பிறகு ஞான தேசிகர் தம் இருக்கையை அடைவார். இரவு நிவேதன மான பிறகு சிவஞானம் தனியே போய் அவரைப் பார்ப் பான். மாலையில் நடந்த பிரசங்கத்தில் தான் தெரிந்து