பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

303 - கலைச் செல்வி

கொண்டதை அவன் சொல்வான். சில சந்தேகங்களைக் கேட்பான். இந்தச் சம்பாஷணையால் சிவஞானத்தின் அறிவு விசாலமாயிற்று. அவனுடைய கூரிய அறிவைக் கண்ட தேசிகருடைய அருளும் விசாலமாயிற்று. அவனே மடத்தின் கிர்வாகத்திலே ஒரு நல்ல உத்தியோகஸ்தனுக்க வேண்டுமென்று ஆரம்பத்தில் பண்டார சங்கிதி கினைத்திருக் தார், அதற்காகத்தான் யாத்திரைக் காரியஸ்தருக்கு உதவி பாக இருக்கச் செய்தார். இப்போதோ கணக்கைக் காட் டிலும் சாஸ்திரத்தைக் கவனிக்கும் காரியத்தில் அவனே ஈடுபடுத்த எண்ணினர். அதற்குக் காரணம் அவருடைய உள்ளத்தின் ஆழத்தில் இருந்த ஒர் ஆவல்.

மடம் இருந்த பழைய நிலையிலிருந்து ஒவ்வொரு )شاید ا மாகச் சிரமப்பட்டு உயர்த்தினவர் அவர்; பல தலைமுறை யிலே ஏறின அழுக்கைத் துடைத்து மெருகு கொடுத்தவர். தாம் எழுப்பிய அந்த மாளிகை கிலேயாகப் பொலிவோடு விளங்க வேண்டுமென்று அவர் ஆசைப்பட்டார். அவ ருடைய காலத்தில் வரவ விருத்தியாம்சமாக இருந்த மடம், அடுத்தபடி எப்படி யாகுமென்பது அவருக்குப். பின் வருபவரைப் பொறுத்தது. நல்ல ஒழுக்கமும் அறி அம் இருந்தாலொழிய மடத்தின் உயர்வைக் காப்பாற்ற முடியாது. அத்தகைய தகுதி பெற்றி ஒருவரைப் பரமேசு வான் தமக்கு அளித்தால் நிச்சயமாக மடத்தின் புகழ் இன்னும் பல காலம் குன்ருமல், சுடர்விட்டு ஒளிரும், சைவ சம்யத் தொண்டும் விடாமல் நடைபெறும் மடம் உண்டான நோக்கம் சிறைவேறும். -

இந்தச் சித்தன. இப்போது தேசிகருக்கு வச வேண்டிய அவசியம் இல்லை. அவர் அப்படி ஒன்றும் தேகத்தளர்ச்சி அடையவில்லை. இன்னும் இருபது