பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுவிய பழம் ፲08

வருஷம் இல்லாவிட்டாலும் நிச்சயமாகப் பத்து வருஷகாலமாவது இப்போதுள்ள மாதிரியே நிர்வா கத்தை நடத்த அவருக்குச் சக்தி இருக்கிறது. பின் இந்த ஞாபகம் வரக் காரணம் என்ன ? சிவஞானந்தான். வேண்டியபோது ஆளைத் தே டி சூ ல் கிடைக்குமா ? கிடைக்கும்போது வேண்டிய ஏற்பாடு செய்வதுதானே இல்லது? -

ஆகவ்ே சிவஞானத்தின் திறமையை அறிய அறிய, அவருடைய கினேவு மடத்தின் வருங்கால ஆராய்ச்சியிலே இறங்கியது. அவனுக்கு மடத்தின் நிர்வாகத்தில் ஏதோ சிறிய வேலையைக் கொடுப்பதைவிட மடத்தின் தலேமைப் பதவியையே அளித்துத் தம் கண்முன்னே மடத்தின் கிர்வாகம் சிறப்பாக நடப்பதைக் கண்டு களிக்க வேண்டும். என்ற ஆசை அவருக்கு உண்டாயிற்று. அந்தப் பதவிக்கு ஏற்ற அடிப்படையான இலக்கணங்கள் அவனிடம் இருந் தன ; சைவகுலம், பிரம்மசாரி, இளைய பிராயம்; இவற் ருேடு அறிவும் ஒழுக்கமும் அவனுடைய தகுதியைப் பின்னும் அதிகமாக்கின. -

பண்டார சக்ரிதி அடிக்கடி சிவஞானத்தை அழைத் துப் பேசுவதும், அவன் அறிவின் இயல்பை அறிவதும், அவனைத் தேவாரம் பாடச் சொல்லிக் கேட்பதும், மற்ற வர்கள் கவனத்திற் படாமற் போகவில்லை. அவனே மடத்தைச் சார்ந்தவர்கள் மரியாதையோடு கடத்தத் தொடங்கினர்கள். -

'சிவஞானம், உனக்குச் சைவசித்தாந்த சாஸ்திரம் பாடம் சொல்லலாமென்று கினேக்கிருேம் ' என்று சொன்னபோது சிவஞானத்துக்கு மயிர்க்கூச்செறிந்தது.

‘அடியேனுக்கு அந்த மகா பாக்கியம் கிடைக்குமானல்