பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுவிய பழம் f05

பிறகு, நாம் மடத்திலிருந்து விலகி வேறு உத்தியோகத் திற்குப் போய்விடக்கூடுமென்று சங்கிதானத்திற்குச் சந்தேகம் உண்டாயிற்ருே?’ என்று யோசித்தான்.

இந்த மடாலயத்தின் தொடர்பு பெற்றவர்கள் தாங்கள் பெற்ற பேற்றை என்ருக அறிவார்கள். இந்த உலகத்தில் வேறு எந்த இடத்தில் இருந்தாலும் இம்மைக் கும் மறுமைக்கும் உதவும் இந்தப் புண்ணியம் கிட்டாது'

என்ற பொதுவாகச் சொல்லி வைத்தான்.

"ஆம்; உண்மை. ஆயிரம் கோயில் வழிபாட்டைக் காட்டிலும் ஒரு மடாலயத் தொண்டு சிறந்தது. மனிதர் கள் உத்தியோகமென்றும் குடும்பமென்றும் சொல்லி அலைந்து பதிஞானம் பெருமல் மேலும் மேலும் பிற விக்கே அடியிடுகிருச்கள். சிவஞானம் வருவது மிகவும் அரிது. அது வரவேண்டுமானல் சோபானக்கிரமத்தில் வரவேண்டும். நல்ல ஞானுசிரியரின் திருவருள் கிடைக்க வேண்டும். எல்லோரையும் போல மனைவி மக்களுடன் வாழ்வது பெரிதல்ல, உலகத்துச் சிற்றின்பங்களை எவன் தியாகம் செய்கிருனே அவன்தான் பேரின்பத்தை அடைவதற்குரிய பக்குவத்தை அடைகிருன். சிவஞானம் அடைவதற்கும் அதனைப் பிறர் அடையச் செய்வதற்கும். உரிய பண்ணையாக ஆதீனங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நீட்சை பெற்றுத் துறவு பூண்டு, தவத்தை வளர்க்கும் வாய்ப்புப் பலருக்குக் கிடைப்பதில்லை. அப்படிக் கிடைத்து விட்டால் அவர் தேவரைக் காட்டிலும் பெரியவர். பிரம்ம சரிய விரதம் காத்துத் துறவு பூலும் சிவஞானச் செல் வர்களின் பாம்பரை அரசாட்சி செய்யும் இடம் மடாலயம். பூலோக கைலாசம் இது. இதன் சம்பந்தம் சிவ சம்

பந்தமே. இங்கே தவநிலை நிற்பார் மிகப் பெரியர்."