பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 கலைச் செல்வி

இன்னும் சிவஞானத்துக்குப் பண்டார சந்நிதியின்

உட்கிடை விளங்கவில்லை.

"உன்னுடைய எதிர்காலத்தைப்பற்றி நன்ருகச் சிந்தித்துப் பார். உனக்குச் சைவ சித்தாந்த சாஸ்திரங் களில் நல்ல பயிற்சி உண்டாக வேண்டும். போகப் போக நாம் சொன்னவற்றின் பொருள் விளங்கும்' என்று சொல்லி முதல் முதலில் சித்தாக்கக் கட்டளையில் பாடத் தைத் தொடங்கினர்.

3

சிவஞானம் சித்தாந்த பாடங்களைக் கேட்டு வந்தான். பஞ்சாட்சர உபதேசம் ஞானுசிரியரிடம் செய்துகொண் டான். பிறகு தீட்சை செய்துகொண்டான். சாஸ்திரம் படிக்க அவை இன்றியமையாதனவென்று தெரிந்து கொண்டான். அவனுடைய தீவிரமான அறிவு சாஸ்தி க் காட்டிலே தங்குதடையின்றிச் சென்றது. -

யாத்திரைக் காலத்தில் வருபவர்களைப் பார்ப்பது, அவர்களோடு பேசுவது, சபையைக் கூட்டுவது, பிரசங்கம் செய்வது முதலிய பல காரியங்களுக்கிடையே சிவஞானத் தக்குப் பாடம் நடந்து வந்தது. அவனுடைய வேகத் துக்கு ஏற்றபடி மடாதிபதியால் பாடம் சொல்ல இயல வில்லை. தமக்காக அவனை நிதானப்படுத்தவும் அவருக்கு மனம் இல்லை. ஆகவே, வேறு தக்க அறிவாளியிடம் அவ னைப் பாடம் கேட்கச் செய்யவேண்டும் என்று எண்ணி ஞர். அவருக்குத் தெரியாத புலவர் யார் இருக்கிருச்? திரு நெல்வேலியிலிருந்த திருஞானசம்பந்த முதலியாரைக் காட்டிலும் சிறந்தவர் யாரும் இல்லை. மங்கலஞான தேசி சுருடைய அருளுக்குப் பாத்திரமானவர் அவர். தமிழுல