பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுவிய பழம் 10?

கத்தில் சைவ சித்தாந்த முடிச்சுக்களே அவிழ்க்க, அவரை பன்றி ஆளில்லை. அவரோ இந்த மடாதிபதியின் ஏவலைத் தலையாலே செய்யக் காத்திருப்பவர். அவரிடமே அலுப்பி அவர் வீட்டிலேயே இருந்து சில வருஷங்கள் சிவஞானம் சாஸ்திரங்களைப் பாடம் கேட்டுவந்தால், பிற்பாடு அவ லுக்குக் காஷாயம் கொடுத்து மடத்தின் அடியார் கூட் டத்தில் ஒருவளுக்கலாமென்பது அவர் திட்டம், பிறகு சின்னப் பட்டம் கட்டி மடத்தின் பொறுப்பையெல்லாம் அவனிடம் ஒப்பித்துவிட்டு ஒய்வாகத் தவம் புரிய வேண்டுமென்பது அவர் முடிவான கோக்கம்.

பண்டா சங்கிதிகளிடமிருந்து வந்த திருமுகத் தைக் கண்டதும் திருஞானசம்பந்த முதலியார் புறப்பட் டார். வந்து ஞானுசிரியரைத் தரிசித்து வணங்கினர்.

ஸ்வாமிகள் முதலியார் நெற்றியில் திருநீறிட்டு அருகே உட்காச் செய்து கேடிமத்தை விசாரித்துவிட்டுத் தம் கருத்தை மெல்லத் தெரிவித்தார்.

"நம்முடைய சிவஞானம் சித்தாந்த சாஸ்திரப் பாடம் கேட்டு வருகிருன். நல்ல அடக்க ஒடுக்கமான பிள்ளே, சொன்னதை உடனே கிரகித்துக்கொள்கிருன், சைவ சித் தாந்த சாஸ்திரங்களைக் கிரமமாகப் படிக்கிறவர்கள் இப் போது குறைந்து வருகிருர்கள். உங்களைப்போல ஒருவரை எங்காவது பார்க்க முடியுமா? உங்களுடைய புலமையைப் பயன்படுத்திக்கொள்ள எண்ணியிருக்கிருேம். சிவ

ஞானத்தை உங்களிடம் பாடம் கேட்கச் சொல்லவேண்டு

மென்பது நம்முடைய ஆவல்.’

“மடத்திலே வந்திருந்து பாடம் சொல்ல வேண்டு மென்பது சங்கிதானத்தின் திருவுள்ளமா?' என்று.

சந்தேகப்பட்டுக் கேட்டார் முதலியார்.