பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

413 கலைச் செல்வி

யளித்தாள் அவள். அவளுக்கு விளங்காவிட்டால் அது சொல்பவருடைய குறை என்பதுதானே அதற்கு அர்த்தம் ? -

முதலியார் தம் பெண்ணுக்கு அத்தனை அறிவு எங் கிருந்து வந்ததென்று ஆச்சரியப்பட்டுப் போனுர், பெண் கள் தங்கள் சக்தியைச் சந்தர்ப்பம் வரும்போது வெளிப் படுத்துவார்கள். அது வரையில் இந்தப் பூனேயும் இந்தப் பாலேக் குடிக்குமா என்று இருப்பார்கள்’ என்பதை முதலியார் அறிந்திருந்தார். ஆனல் தம் சொந்த மகளின் திறமையைத் தாம் இதுகாறும் அறிந்து கொள்ளவில்லை யென்பது அவருக்குப் புலப்பட்டபோது, பெண்கள் தங்கள் திறமையை அடக்கி வைத்திருப்பது கிடக்கட்டும். ஆண்கள் எவ்வளவு பழகினலும் பெண்களின் சக்தியை எளிதில் அறிந்துகொள்ள முடியாது’ என்று ஆண் இனத்தின் பலஹீனமும் புலப்பட்டது. - - தம் மகளுக்கும் சித்தாந்த பாடம் சொல்ல ஆரம்பித் தார். சிவஞானம் நான்கு நாள் கழித்து வந்த பிறகு தம் ஆசிரியரிடம் வேருெருவர் பாடங் கேட்கத் தொட்ங்கியிருக் கும் செய்தி தெரிய வந்தது. அதை இப்போது தெரிந்து கொண்டதில் ஒரு விசேஷம் இருந்தது. அவன் உள்ளத் தில் ஒரு துணுக்கம் ஏற்பட்டது. இந்த முறை ஞானசிரி யரைத் தரிசித்தபோது வழக்கம்போல அவர் செய்த உபதேசங்கள் பல. முக்கியமாக அவர் ஒன்றை வற்புறுத் தினர். "சிவஞானம், உன்னல் உலகத்துக்குப் பெரிய கன்மைகள் ஏற்படவேண்டுமென்று. நாம் . எதிர்பார்க் கிருேம். நீ உன்னுடைய சிக்தை முழுவதையும் சமய நூல் களிலே ஈடுபடுத்த வேண்டும். உலகியலில் சிறிதும் கவ. ாத்தைச் செலுத்தாதே. நீ எப்போது மடத்தின் செல்