பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுவிய பழம் . 143 வப் பிள்ளையாகிவிட்டாயோ, அப்போதே உனக்கு

லெளகிகக் கொள்கைகள் பறந்துபோய் விட்டன. ஆகை யால் எல்லாவற்றையும் மறந்து சாஸ்திா அறிவிலே ஆழ்ந்து பயில். முக்கியமாகப் பெண் பிள்ளைகளோடு பேசுவதோ, பழகுவதோ கூடாது. அந்த விஷயத்தில் வெகு ஜாக்கிச தையாக இருக்கவேண்டும். உலகம் பொல்லாதது. சிவ பெருமான் உனக்கு மைேதிடத்தையும் அறிவுப் பலத் தையும் அருள் செய்வாராக!' என்று அவர் உள்ளுருகிக் கூறிய வார்த்தைகள் அவன் காதில் ஒலித்தன. அந்த நினைவோடு இங்கே வந்தான். இங்கே இதோ ஒரு பெண் தனக்குப் போட்டியாகப் பாடம் கேட்க வந்திருக் கிருள். உலகம் பொல்லாதது" என்று அவனும் நினைத்தான்.

காந்திமதி அவனுக்குத் தெரியாத பெண் அல்ல. மடத்த ஐயாவும் அவனுக்குப் புதியவர் அல்ல. ஆலுைம் காந்திமதி என்னும் சட்டகத்துக்குள்ளே இருந்த அறிவுப் பிழம்பு அவனுக்குப் புதிதாக இருந்தது. அவளேப்பெற்ற தகப்பனுருக்கே புதிதாக இருக்கும்போது அவனுக்குப் புதிதாகத் தோன்றுவது என்ன ஆச்சரியம்? பெண் களோடு பழகாதே’ என்று ஞானசிரியர் உபதேசம் செய்த தைப்பரிகசிக்கிறதைப் போல இருந்தது காந்திமதிபாடம் கேட்ட நிகழ்ச்சி. அவள் தந்தை சொன்னர்:சிவஞானம், இவள் கூடச் சித்தாந்த சாஸ்திரம் படிக்கிருளாம். முன்பே பல விஷயம் தெரிந்துகொண்டிருக்கிருள். சொன்னதை யெல்லாம் உடனே பிடித்துக் கொள்கிருள். தனியாக பாடம் கேட்கிருய். பாடம் கேட்பதைப் பிறருக்குச் சொல்லிப் பழகினல் அறிவு வன்மையும் என்று சொல் வார்கள். ஆகையால்யுேம்.இவளுக்குப்பாடம்சொல்லலாம்.”