பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fié கலேச் செல்வி

'அப்பா, அம்மா எதற்கோ கூப்பிடுகிருள்' என்று உள்ளே எழுந்த போய்விட்டாள் அவள்.

சிவஞானம், “எனக்கு அவ்வளவு போதாது. அதோடு லஜ்ஜையாகவும் இருக்கிறது” என்று சொல்லிவிட்டான். சந்தர்ப்பம் கிடைத்தபோது காந்திமதி, "நான் அவரிடம் பாடம் கேட்கமாட்டேன். முன்பே இதைச் சொல்லி இருக் கிறேன். அவரைப் பாடம் சொல்லச்சொல்லி வேலே வாங்கு அதற்காகவா மடத்தில் உங்களுக்குப் பணம் தருகிருர்கள்?" என்று கேட்டாள். முதலியார் அந்தப் பேச்சையே பிறகு எடுக்கவில்லை, - -

இரண்டுபேரும் தனித்தனியே பாடம் கேட்டார்கள். சிவஞானம் கேட்டபோது அவள் உள்ளே இருந்து கவனித்து வந்தாள். அதனுல் அவன் பாடத்தையும் அவள் சேர்த்துக் கேட்ட பலன் கிடைத்தது. அவளுக்குப் பாடஞ் சொன்னபோது முதலில் சிவஞானம் கவனிக்கா விட்டாலும் அவளுடைய சாதரியமான கேள்விகள் கவ னிக்கும்படியாகச் செய்து விட்டன. இந்தப் பெண்ணுக்கு எவ்வளவு கூரிய அறிவு இருக்கிறது' என்று வியந்தான். உடனே, உலகம் பொல்லாதது' என்ற ஞானசிரியர் உப தேசம் தனியே ஒர் உருவெடுத்து அவனைப் பயமுறுத்து வது போல இருந்தது. -

இருவரும் தனியே பேசவில்லை; முதலியார் முன்பும் ஒன்ருக இருந்து பழகவில்லை. ஆலுைம் இயற்கை வேலை செய்யத் தொடங்கியது. ஒருகால் இருவரும் தாாளமாசுப் பழகினல் அதன் வேகம் குறைந்திருக்குமோ என்னவோ! இப்போது நாளுக்கு காள் அது முறுகி வளர்ந்து வேகம் பெற்று இருவர் உள்ளத்தையும் ஆட்கொண்டது. அவள் சிந்திக்கிருள். இவர் மேனி அழகு கிடக்கட்டும்; கஷ்டப்