பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைச் செல்வி - 7

அரசன் தனக்கென்று அமைந்த சிங்காசனத்தில் வீற்றிருந்தான். தன் படைவீரர்களே அணிவகுத்து, அவர் களுடைய கிண்டோளைக் கண்டு பூரித்து, "இவர்கள் நமக்கு வெற்றி வாங்கித் தருவார்கள்” என்று சேனைத் தலைவன் மகிழ்வான்; இங்கே அரசன் இந்தக் கலைவிழாவில் மழலைச் சிலம்பு தனக்கும் சோழநாட்டுக்கும் பரந்த புகழைத் தேடித் தரப் போகிருள் என்ற பெருமிதத்தோடு வீற் திருந்தான். நடனம் தொடங்கியது. முதலில் கூட்டத்தினர் அந்த ஆரம்பத்தை உணர்ந்தனர். பிறகு ஒவ்வொரு சிகழ்ச் சியும் நடக்க நடக்க அவர்கள் தம்மையே மறந்தார்கள்.

மிக அற்புதமாக ஆடினுள். என்றும் இல்லாத பேரழ கோடு விளங்கிள்ை அவள். அவள் தாய் பின்னிருந்து பாட்டுப் பாடினுள். வந்தவர்கள் எப்படி சவலிக்கிருர்கள் என்பதைக் கவனித்து வந்த அரசன்கூட அந்தக் காரி யத்தை மறந்து சடன எழிலிலே ஒன்றிப்போன்ை. .*. நடனம் முடிந்தது. மன்னனைக் கலைஞர்கள் அணுகிப் புகழ்ந்த புகழ்ச்சிக்கு அளவுண்டா? முடிவுண்டா? அவ். வளவு சொல்லியும் சொல்லிவிட்ட திருப்தியை அவர்கள் அடையவில்லை. அரசன் என்றும் அடையாத இன்ப சாகரத்தில் மிதந்துகொண்டிருந்தான்.

நடனம் முடிந்ததும் மழலைச்சிலம்பும் அவள் தாயும் தங்கள் மாளிகைக்குச் சென்ருர்கள். மன்னன் அந்த நடன சுந்தரியைச் சக்தித்தான். அவளும் அவனே ஆசை யுடன் எதிர்பார்த்திருத்தாள். அவன் வரும்போதே குதித் தோடிச் சென்று எதிர்கொண்டழைத்தாள். காதலரும் கலே வலிகர்களுமாகிய அவர்கள் ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொண்டு மகிழ்ந்ததைப்பற்றிச் சொல்ல நமக்கு - உரிமை ஏது? நம்முடைய ஊகம் எவ்வளவு தாரத்துக்குச்