பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுவிய பழம் Ifá

பட்டால் ராமபேரை இவரைப்போலப் பொறுக்கி யெடுக் கலாம். ஆளுல் இவருக்கென்று இந்த அறிவைக் கடவுள் எங்கிருந்து கொண்டுவந்து கொடுத்திருக்கிருர்? தேவா ாத்தைத் தேளுக்கிப் பாடுகிருர், சாஸ்திரத்தையோ கரைத் துக்குடித்துவிட்டார். அப்பா இவரிடத்தில் பாகில்விழுந்த ஈயைப்போலத் தம்மையிழந்து கிற்பதற்குக் காரணம்

இருக்கிறது. இந்தப் பண்டார சங்கிதிக்கு இவர் எப்படிக் கிடைத்தார்? அவர் பாக்கியசாலி. அவர் பாக்கியம் இருக்

கட்டும். எங்கள் அப்பா இப்படி ஒரு மாளுக்கரைப் பெற எவ்வளவு தவம் செய்திருக்கவேண்டும் இவரைக் கல்யா

ணம் பண்ணிக்கொள்ளும்...." சிந்தனைகூட கின்றுவிடுமா

என்ன? உள்ளத்துக்குக்கூடச் சோர்வு உண்டோ அது

தான் அப்படி அவள் மயங்கி ஸ்தம்பித்து கிற்கிருள்.

அவனே எத்தனையோ சிந்தனைகள் அவன் உள்ளத் தில் ஒடுகின்றன. ஆனல் ஒவ்வொரு சிந்தனைத் தொடரும் உலகம் பொல்லாதது என்ற ஞானசிரியர் உபதேச மாகிய பல்லவியில் வந்து முடிகின்றது.

. 'இவள் அறிவு சாமான்யமானதன்று. பெண்கள் சமய ால் படிப்பதென்பது அதிசயம். ஆண்களே படிப்ப தில்லையே கல்லும் முள்ளும் கலந்த பாதை சம்பால் ஆராய்ச்சி. அதில் இவள் தளிரும் பூவும் பாத்திய பாதை யில் நடப்பதுபோல நடக்கிருளே. சிவஞானபோதம் இவள் அறிவிலே ஊறி இனிக்கிறதே! பெண்-ஆம்; இவள் பெண் தான். இவளோடு பழகுவதும் பேசுவதும் தவறு என்று சொல்வது நியாயமா? ஞானகிரியர் இவளைக் கண்டால் அப்படிச் சொல்லுவாரா? சே, சே, இவளே உத்தேசித்துச் சொன்னதல்ல அது. இவள் சாஸ்திரப் பிழம்பு. இவளைக்