பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நழுவிய பழம் - ff;"

'இது நம் திறமை அல்ல. காந்தம் இரும்பை இயக்குகிறது. அனல் மெழுகை உருக்குகிறது. காந்திமதியின் சக்கிதியில் இனிம்ை எனக்கு வந்தது என்று அவன் மதுரமான சிந்தளு லோகத்தில் மிதந்துகொண்டிருந்தான்.

அவள் சும்மா இருந்தாளா? 'அடாடா எத்தனை அருமையாகச் சொல்லி வி உதாரணம் எத்தனை அழகு! இதுவரையில் அவரிடமே நான் பாடம் கேட்டிருந்தால்- அவள் உடம்பு

புல்லரித்தது.

ளக்கினர் அவர் சொன்ன

5

காந்தமும் இரும்பும் அணுகின. காந்திமதியும். சிவஞானமும் உள்ளத்தால் பிணிப்புண்டனர். இது திருஞானசம்பந்த முதலியாருக்குத் தெரியாமல் போக வில்லை. அவர் சந்தோஷப்பட்டார். ஞானமங்கல ஆதீன வித்துவான மாப்பிள்ளையாகப் பெறுவதென்ருல் அவருக் குக் கசக்கிறதா? அவருக்கு எளிதிலே கிட்டுவதா அந்தப்

பாக்கியம்?

காந்திமதி ஒருமுறை பண்டார சங்கிதிகளைத் தங்தை யுடன் சென்று தரிசித்தாள். குழந்தைக்குச் சித்தாந்த சாஸ்திரத்தில் அறிவு உண்டு என்று சொல்லி வைத்தார் முதலியார். காந்திமதி சிவஞான சித்தியாரிலிருந்து சில திருவிருத்தங்கள் சொல்லி உரை விரித்தாள். மிகவும் தன்முக இருந்தது. மடாதிபதி மனமுருகி அவளைப் பாராட்டினர். 'குழந்தாய், உனக்குச் சிறந்த சாஸ்திர அறிவு வாய்ந்த மணுளன் கிடைக்கவேண்டும். பூரீ கெல்லை. யப்பர் திருவருளால் உனக்கு ஏற்ற அறிவழகன் கிடைப்பா னென்றே தோன்றுகிறது' என்று ஆசீர்வாதம் செய்தார்.