பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fið கலைச் செல்வி

சிவஞானம் சைவசித்தாந்த சாஸ்திரங்கள் பலவற். றைப் பாடம் கேட்டான். ஆராய்ந்தான். அவன் அறிவு சாஸ்திரச் சுரங்கத்தில் நுழைந்து வேலை செய்தது. அவன் இருதயமோ காதலென்னும் சுகந்தத்தைப் பெற்று மலர்க் தது. உலகம் பொல்லாதது என்ற உபதேசம் அந்த மலர்ச்சியைத் தடைப்படுத்தவில்லை, காதல் வளர்ந்தது.

அவளும் காதல் உருவானள். தகப்பனும் இரண்டு காதலர்களையும் ஒன்று படுத்தத் தருணம் பார்த்திருந்தார்.

பண்டார சங்கிதியோ அவனுக்குக் காஷாயம் கொடுக் சத் திட்டம் போட்டுக்கொண்டிருந்தார்.

அவன் நாக்கிலும் மூளையிலும் சித்தாந்த சாஸ்திர அறிவு கிரம்பியிருந்தது. உள்ளத்தில் காதல் சிரம்பியிருந் தது. சாஸ்திர அறிவு மேலே மிதந்தது. அடியிலே அமுக் தில் உள்ள காதற் பிரதேசத்தைத் தொ- அதற்கு வன்மையில்லை, -

முதலியார் என்ன என்னவோ யோசித்தார். பண்டார சக்கிதிகளிடம் சொல்லிக் கல்யாணத்தை முடித்துவிட வேண்டுமென்று தீர்மானித்தார். அவருக்கு ஞானசிரியர் உள்ளக்கிடை தெரியாதே 1 - - - -

. · EII நல்ல நாள் பார்த்த ஞானமங்கலம் சென்ருர். பழம், புஷ்பம், வெற்றிலை பாக்கு நிறைந்த தாம்பாளத் துடன், பண்டா சந்நிதி, தனியே இருக்கும் சமயம் பார்த்துப் புகுந்தார். அவர் முன்னிலையில் வைத்துப் பாதத்தில் விழுந்து வழிபட்டார். ஞானசிரியர் அவர் நெற்றியில் திருமே இட்டு, "என்ன விசேஷம் இந்தத்

தடபுடலுக்கு என்ன காரணம்?' என்று கேட்டார்.