பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்ேச் செல்வி g

கும் மனிதன் ஒரு வரம்புக்குள் அடங்கி சிற்பான். சம் முன்னேர்கள் ஆடரங்கைத் தனியாக அமைக்கவில்லை. திருக்கோயில்தான் அவர்களுக்கு ஆடரங்காக இருந்தது. நேற்று வரையில் சோழ சாம்ராஜ்யத்தில் நடனபதியாகிய பரமேசுவரனையே கித்திய சபாபதியாக வைத்து நம் குலத் தினர் தம் கலைத் திறமையைக் காட்டி வந்தனர். அரச ரும் அந்த முறைக்கு உறுதுணையாக இருந்தனர்.ஆனல் இப்பொழுதோ !” -

அசட்டையாகக் கேட்டு வந்த மழலைச்சிலம்பு விழித் துக்கொண்டாள். என்ன அம்மா சொல்லுகிருய்? மகா

so

ராஜாவைக் குறை கூறுகிருயா ?

"அவரைக் குறை கூற நான் யார், அம்மா? உன்னைப் பற்றித்தான் சொல்லுகிறேன். பரம்பரை பாம்பரையாகச் சிவபிரான் திருச் சங்கிதானத்தின் முன் நம்முடைய விலை யற்ற கலையை அர்ப்பணம் செய்து வருகிருேம். நான் இன்றும் அதைச் செய்து வருகிறேன். நீயோ கோவிலுக் குப் போவதையே விட்டுவிட்டாய். நமக்கெல்லாம் உண்மை யான புருஷன் சர்வலோக சக்கரவர்த்தியாகிய நடராஜன் தான், அம்மா. நீயோ இப்போது அரசனே நம்பிப் புரு ஷனைக் கைவிட்டு விட்டாய். எல்லா வகையிலும் சிறந்து என்னையும் மீறிப் புகழ் பெறுவாய் என்று கினைத்து மகிழ்ந்தேன். இந்த விஷயத்தில் நீ தர்மத்தை மறந்தாய். ஆகவே அத்தனையும் விருதாவாயிற்று. நீ கலைகளை ஆராய்ந் திருக்கிருய். யோசித்துப் பார். கடவுளே மறந்த கல்ை பிணம். நாம் பிணத்தைத் தழுவலாமா?’

மழலைச்சிலம்பு சற்றே மெளனமாக இருந்தாள். பின் பெருமூச்சு விட்டாள். தாயின் வார்த்தைகளில் உண்மை. இருப்பதை அவள் உணர்த்தாள். அவளா அதற்குக் கார