பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலச் செல்வி 息篡

மகாராஜாவே இறந்துவிட்டால்? இந்த நினைப்பு அவள் உடம்பை ஒர் உலுக்கு உலுக்கியது.

"என்னம்மா நடுங்குகிருய்' என்ருள் தாய்.

- ஆம், மகாராஜா இறந்துபோனல், நம் கலை எங்கே விற்கும் ? இறவாத நடராஜாவைப் பகிஷ்கரித்த கலை ஆயிற்றே. அதுவும் இறந்துபோக வேண்டியதுதானே ? அணு அனுவாக அறிவையும் ஜீவனேயும் இணைத்து வளர்த்த கலை வீணுவதா!.... அவள் சிந்தனை காய் எழுப் பிய மூல சூத்திரத்திற்கு இப்போது புத்துரை காணத் தொடங்கியது.

தாய் சொல்கிருள்: 'கான் மிகவும் கடுமையாக, நன்றி யில்லாமல் பேசுகிறேன் என்று கினேக்காதே. விரும்பினு லும் விரும்பாவிட்டாலும் உண்மை உண்மைதான். உன் கலைக்கு நாயகனுக நீ கருதும் மகாராஜாவுக்கு எதாவது குறைபாடு நேர்ந்து உன் கலையை அதுபவிக்க முடியாமல் போய்விட்டது என்று வைத்துக்கொள். ஊழ்வினையை யாாம்மா கண்டார்கள்? யார் ஆயுசை யார் பிடித்துக் கொள்ள முடியும் அப்போது உன் கலை....” - இதென்ன, அம்மாவும் இதைச் சொல்கிருளே !’ சிலம்பு சிந்தனையில் தீவிரமாக ஆழ்ந்துவிட்டாள். உள்ளம் மெல்ல மெல்ல உருகியது. கண் கலங்கியது. நீர் கசிங் தது. சிறிது நேரம் அப்படி இருந்தாள்.

"நான் என்ன செய்யமுடியும், அம்மா?' என்று தழு தழுத்த குரலில் கேட்டாள் மழலைச்சிலம்பு.

‘'நீ அரசன் கருத்தை மாற்றினுல் தர்மம் நிலைக்கும். மாற்றுவது கடினம் அல்ல." . -