பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலச் செல்வி fă.

" அதெல்லாம் ஒன்றும் இல்லை. அலுப்பு அதிகம். உடம்பைக் கவனித்துக்கொள்ள வேண்டியது என் பொறுப்பு. அதை மறந்தேன்.” -

தேக அசெளக்கியத்திலிருந்து பேச்சு எங்கெங்கோ தாவியது. மெல்ல மன்னனுடைய ராஜதானி கிர்மாண சம். பந்தமாகச் சென்றது. மன்னன் பேச்சினிடையே ஒன்று: சொல்லலான்ை: "அயல் நாட்டிலிருந்து வந்தவர்களுன் மிகவும் அற்புதமான சித்திரம் வரையும் ஒவியர் ஒருவச் இருக்கிருர். அவர் என் உருவத்தை ஒவியமாக எழுத ஆரம்பித்திருக்கிரு.ர். அதற்கு முன் என் விருப்பம் ஒன்றை நிறைவேற்றித் தரும்படி சொன்னேன். அது என்ன, உனக்குத் தெரியுமா?"

அவள் ஊகித்துக்கொண்டாள். "அடிமையின் மேல் மகாராஜாவுக்குள்ள பெருங்கருணையாக இருக்கலாம்.” -

"அதுதான், அதுதான். கடனமிடும் கோலத்தில் உன் உருவத்தை முதலில் வரையச் சொல்லியிருக் றேன்." - - -

மழலைச்சிலம்பு பிரமித்தவளைப்போல் சற்றுச் சும்மா இருந்தாள். பிறகு, 'மகாராஜாவிடம் ஒரு விண்ணப்பம்: விநயம் காரணமாக மகாராஜாவின் திருவுள்ளத்துக்கு விரோதமாகச் சொல்ல எனக்கு உரிமையில்லை. அடிமை யின் நடனக் கோலத்தை அடிமை விரும்புகிற மாதிரி போட்டால் நன்முக இருக்கும். ஒவியரை அடியாள் பார்க்கமுடிந்தால் என்கருத்தைச் சொல்வேன்' என்ருன்.

"அப்படியே செய்யலாம். ஒவியரை உன்னிடம் அனுப்புகிறேன்" என்று மன்னன் சொன்னன்,

撫 驚 醬。