பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைச் செல்வி áడి

"மகாராஜா, கூமிக்க வேண்டும். சோழ வம்சத்தில் வந்த தங்களுக்குப் படத்தின் கருத்தை விளக்கும் அதிகப் பிரசங்கித்தனத்தைச் செய்ய எனக்குத் துணிவில்லை.”

'சொல்லேன். கோயிற் கணிகையாக இருக்கத்தான் உனக்கு விருப்பமா?

"அப்படி அன்று, கலேயைக் கலாநாதனுக்கு முன்னே சமர்ப்பிக்கும் தொழில் அது.”

"கலைக்குச் சிறை போட்ட தாகாதா?’ 'கால எல்லேயும் இட எல்லையும் உடைய ஆடரங்கமும் அதில் வந்து வலிப்பவர்களும் எல்லேக்குள் அகப்பட்ட வர்கள். அவர்களிடம் வரும் கலையும் எல்லைக்கு உட்பட் டுச் சிறைப்படுவது அங்கேதான். எல்லேயற்ற பாம்பொரு ளின் முன்னே கலை தன் எல்லையில்லாத விரிவோடு விளங்குகிறது. கலை கலையாக கிற்கிறது. உலக நினைவாகிய அழுக்கு அங்கே இல்லை.”

"என்ன சிலம்பு, நீ வேதாந்தம் பேசுகிருயே!”

உண்மைக் கலைஞனுக்கு வேதாந்தம் தாாமல்ல. கலே ஞனும் வேதாந்தியும் ஒரே மண்தான்.” - - 'உன் கலேயை நான் வலிக்கக் கூடாது என்று சொல்லுகிருயோ?”

“மகாராஜா அடியாளே அபசாரம் செய்தவளாக்கக் கூடாது. கலையை வலிக்க யாருக்கும் உரிமை உண்டு. ஆண் டவ்ன் சக்கிதானத்திலே வைத்து எல்லோரும் அதுபவிக்க லாம்; ஆண்டவன் அருள் கினைவோடு அநுபவிக்கலாம்.' - மன்னன் யோசனையுள் ஆழ்ந்தான்.

'சோழ சாம்ராஜ்யத்தில் கலைக் கிருகங்களாகக் கோயில்கள் இருக்கின்றன. அரசர்கள் தங்கள் புகழைக்