பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£8 கலைச் செல்வி

சிற்பதாகத் தெரிந்தது. அவள் கையில் வைத்திருந்த படத்தை வாங்கினன். கண்களில் ஒத்திக்கொண்டான். மறுபடியும் அவன் யோசனையில் ஆழ்ந்தான்.

திடீரென்று மன்னன் ஏதோ ஒரு புதிய வேகத்தில் பேசிளுன்: ' என் கன் திறந்துவிட்டது. நான் உன்னை மறுமுறை சக்திக்கும்போது உண்மை விளங்கும். சில காலம் சான் உன்னேப் பாராமல் இருப்பேன். அதைத் தவ முக கினை யாதே. மற்ருெரு விஷயம்: நீ இன்று முதலே கங்கைகொண்ட சோழபுரேசர் திருக்கோயிலுக்குப் போய் உன் விருப்பப்படி நடனம் செய்யலாம்.”

毫爵 f* ஹா !

மன்னன் அதற்குள் சென்றுவிட்டான்.

இதென்ன ஆச்சரியம் மந்திரிமார்களுக்கு ஒன் றும் விளங்கவில்லை. அரண்மனை கட்ட வேண்டுமென்ற திட்டத்தை அடியோடு மாற்றி, புதிய திருக்கோயில் ஒன் றைப் பழையாற்றுக்கருகில் ஓரிடத்தில் கட்ட அல்லவா அரசன் ஏற்பாடு செய்கிருன்? வந்த கலைஞர்கள் அவ்வளவு பேருக்கும் அது சம்பந்தமாக வேலை கொடுத்துவிட்டான். பழையாற்றத் திருமாளிகையில் போய் வசிக்கத் தொடங்கினன். . ኵ

மழலைச்சிலம்பை விட்டுப் பிரித்து இவர் எப்படி இருக்கிருர் ' என்று யாவரும் ஆச்சரியப்பட்டனர்.

இந்திாஜாலம்போல, வெறுங் கட்டாக்கரையாக இருந்த இடத்தில் திருக்கோயில் வெகு வேகமாக எழும்பி யது. மிகவும் விரிக்க அமைப்பு. தஞ்சை ராஜ ராஜேசு வரத்தையும், கங்கைகொண்ட சோமுேச்சுரத்தையும்