பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கலச் செல்வி

பிரியே, நீ காதால் கேட்டதைக் கண்ணுல் பார்க்க வேண்டாமா? அதற்காகத்தான் இன்று வந்தேன். வா, போகலாம். இன்னும் பல வேலைகள் இருக்கின்றன.

அரசன் மழலைச்சிலம்பை அழைத்துச் சென்ருன், கும்பகோணத்துக்கு மேற்கே பழையாற்றுக்கு அருகில் கோயில் எழும்பியிருந்தது. நெடுந்துாரத்திலேயே இரு வரும் சிவிகையிலிருந்து இறக்கினர்கள். கோபுரத்தைக் கண்ட அளவிலே மழலைச்சிலம்பிற்கு மயிர்க் கூச்சு உண் டாயிற்று. நெருங்கி வரவரக் கோவிலின் விரிவை அவள் தன் கண்களால் அளந்தாள். - .

இத்தனே அழகாகக் கட் டிமுடிக்க மகாராஜாவுக்குத் திருவருள்தான் துணையாக இருத்திருக்கிறது ' என்று பொங்கிவரும் உணர்ச்சிப் பெருக்கோடு சொன்னுள் மழலைச்சிலம்பு. “ . . . . . . . . . .

"திருவருளுக்கும் மூலகாரணம் ஒரு திருவின் அருள்" என்ருன் அரசன். அவள் புன்னகை பூத்தாள்.

ஆலயத்துக்குள் துழைந்தார்கள். ஒவ்வொரு பகுதி யாக அரசன் காட்டிக்கொண்டு வந்தான். இந்த மண்ட பத்துக்கு என் தந்தையார் பட்டப் பெயர்களுள் ஒன்றை வைத்திருக்கிறேன். ராஜகம்பீசன் திருமண்டபம் என்று பெயர். அதைக் கல்லில்ே பொறித்திருக்கிருர்கள், பார்

"மறந்துவிட்டேனே இந்தக் கோயிலுக்குக் குலோத் தங்க சோழேச்சுரம் என்பதுதானே பெயர்?' என்று கேட்டாள் அவள். - - - -

ఫైశుడి); என் தந்தையார் பெயரோடுதான் இது வழங்கும். ஆம், ராஜராஜேசுவாம் என்பதுதான் இதன் பெயர்.”