பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலச் செல்வி 3?

அவளுக்கு உண்டான பிரமிப்பிலே அவளால் பேச முடியவில்லை. அரசன் எவ்வளவு துராம் தன் அகங்காகத் தைத் துடைத்துவிட்டானென்பதை அது காட்டியது.

இன்னும் உள்ளே துழைந்தார்கள். ஒவ்வொரு சந்நிதி யையும் காட்டிக்கொண்டே வந்தான் அரசன். *

'இந்த இடங்தான் எனக்குப் பரிபூரணமான திருப் தியை அளிக்கும் இடம்” என்று சொல்லிக்கொண்டே அம்பிகை சங்கிதியின் முன் மண்டபத்துக்கு வந்தான். எதிரே ஒரிடத்தில் ஒரு சிலையுருவத்தைத் திரைச்சீலையிட்டு மறைத்திருந்தார்கள். 'இந்தக் கோவிலுக்கு மூலகாரன மான மூர்த்தியை இங்கே காணலாம்' என்ருன் அாசன்.

எங்கே ??? "சற்றுப் பொறு, உன்னே நீ சித்திரத்தில் வரையச் செய்தாயே, அதிலிருந்து உன் விருப்பம் தெரிந்தது. தெய்வத்துக்குக் கலையை அர்ப்பணம் செய்வதுதானே உன் விருப்பம்' - - அவள் தலையை அசைத்தாள்; "இதெல்லாம் இப் போது எதற்கு? என்னே இந்தத் திருக்கோவிற் பணியில் ஈடுபடுத்துவதாகத் தேவரீர் எண்ணியிருப்பது போலத் தோன்றுகிறது! அப்படியாகுல் என் பர்க்கியம்!" o ஆம்; அதுமட்டும் அன்று. இந்தச் சக்கிதி உள்ள வரையில் நீ இங்கே இருப்பாய் !'

மன்னன் சமிக்ஞை செய்தபடி அங்கே ஒருவன் வந்து எதிரே இருந்த திரைச் சிலையை விலக்கினன். வா. பாலிகை, அற்புதமான செளந்தரியத்தையுடைய ஒரு மட மங்கையே உயிரோடு வந்து நிற்பதுபோல அந்த உருவம் கின்றது. மழலைச்சிலம்பு கண்களே அகல விரித்துப்