பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரங்கின் சுதந்தரம்

1

குரங்கனுர்ர்க் கிராமத்தில் குரங்காட்டி குப்பன் ஒரு குடி, கரடிக்காாக் கறுப்பன் ஒரு பிரஜை. வண்ணுன் முத்து ஒரு குடிசைக்காரன். இவர்களுக்குமேல் சிறிது உயர்ந்த அந்தஸ்தில் வாழ்கிறவன் சார்ட்டுக்காரச் சந்தா சாகிபு. பக்கத்தில் வடக்கே பத்து மைல் தூரத்தில் ஒரு பட்டணமும் தெற்கே அஞ்சு மைலில் ஒரு பெரிய ஊரும் இருந்தன. இந்த நாலு தொழிலாளிகளுக்கும் அந்தப் பட்டணங்களிலும் சுற்றுவட்டக் கிராமங்களிலும் அவரவர்கள் உழைப்புக்குத் தகுந்தபடி ஜீவனம் சடந்து வந்தது. சான்கு பேரும் ஒரு விஷயத்தில் ஒரே மாதிரி உள்ளம் படைத்தவர்கள். தங்களுடைய ஜீவனத்துக்குத் துணையாக உள்ள ஜீவன்களிடத்தில் எல்லோருக்கும் பிரி யம் அதிகம். குரங்காட்டி குப்பன் தன் குரங்கின்மேல் இருக்கும் பிரியத்தை வெளிப்படையாகக் காட்டாவிட்டா. லும் அவனுக்கு உள்ளுறப் பிரியம் இருக்கத்தான் இருந் தது. வண்ணுன் முத்து தன் கழுதையை அடித்தால் ஒன்று இரண்டு அடியோடு கிறுத்திக்கொள்வான். “இந்தக் களுதைச் சாதிக்குப் பூசை இல்லாட்டிச் சரியா வராதுங்க” என்பது அவன் சித்தாந்தம், அதற்குத் தீனி எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அடியும் அவசியம் என்பது அவன் அதுபவ ஞானம். காடிக்காரக் கறுப்பன் மகாசாது. அவனே க் காட்டிலும் அந்தக் கரடி பரம சாது. ஆகவே சாதுவுக்கும் சாதுவுக்கும் சரியாகப் பொருத்தம் ஏற்பட்டு விட்டது. சந்தா சாகிபு தன் குதிரையைக் கண்ணேப்.