பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கலைச் செல்வி

போலப் பாதுகாத்து வந்தான். ஒரு கல்யாண ஊர்வலத் தில் அது சம்பாதிக்கிறதை வைத்துக்கொண்டு அவன் ஒரு மாதம் தள்ளுவானே! அதைத் தேய்க்கிறதற்கு ஒரு வெட்டியானைத் தனியே அமர்த்தியிருந்தான். கொள் ளிலோ புல்லிலோ அதற்குக் குறை வைக்கிறதே இல்லை. அல்லா அவனுக்குக் குழந்தை குட்டியைக் கொடுக்கவில்லை; ஆனல் குதிரையைக் கொடுத்திருந்தார். ஆகையால் அதைக் குழந்தையைப் போலவே பாதுகாக்தி வந்தான்.

安 * 苯 - இந்தப் பீடிகைக்கும் நமது கதைக்கும் நேரடியான சம்பந்தம் ஒன்றும் இல்லை. குரங்காட்டி குப்பனே, கரடிக்காரக் கறுப்பனுே நமக்குப் பிரதானம் அல்ல. கம் முடைய கதா நாயகர்கள் ராமாயணத்தில் வரும் ராம லஷ்மண பாத சத்துருக்னர்களைப் போல நான்குபேர்; கான்கு பிராணிகள், குரங்கு, கரடி, கழுதை, குதிரை. ஆகிய இந்த நான்குமே நம்முடைய கதையை ஓடச் செய் பும் அற்புத விக்கிரகங்கள். இந்த நான்கு பிராணிகளிலும் குங்கப்பன்தான் மிகவும் முக்கியம். ராமாயணத்தில் ஆஞ்சநேயர் இல்லாவிட்டால் ஆானிய காண்டத்தோடு கதை கின்றுவிட வேண்டியதுதானே? நம்முடைய குங் குப்பிானே கதையின் ஆரம்ப முதல் தன் லீலா விநோதங்களைக் காட்டுகிமூன்.

  • - * s குரங்குக்கு வெளியிலே பிச்சை வாங்கின வேசம் போக, அநேகமாகப் பிற்பகலிலும் - சாயங்கால த்திலும் ஊர் சுற்றுவதுதான் வேலை. குப்பன் அதை அவிழ்த்து விட்டுவிடுவான். தன் வீட்டிலேயே பிறந்த குட்டி ஆகை