பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரங்கின் சுதந்தாம் 25

யால் அது வேறு எங்கும் போகாது என்று நம்பித்தான் அதை விடுவான். குரங்குக்கும் குரங்கனூரும் பக்கத்து ஊர்களும் அல்லாமல் வேறு உலகமே இல்லை.

இப்படி இருக்கையில் எதோ ஒரு காட்டுக் குரங்கு அந்த ஊருக்கு வந்துசேர்ந்தது. அது பெண். நம்முடைய குரங்கு ஆண். இயற்கையின் சக்தி அந்த இரண்டையும் சிறிதுபோது ஒன்று சேர்த்தது. "என் ஆசை நாயகரே, நீங்கள் காட்டுக்கு வந்துவிடுங்கள். வேண்டிய அளவுக்குக் கனியும் காயும் தின்று உல்லாசமாக வாழ்வோம். சுதந்த ாஜ்யம் அது. இங்கே யஜமானன் கோல் ஆட நாமும் ஆடுகிருேம். இதைக்காட்டிலும் கேவலமான வாழ்க்கை வேறு இல்லை. இப்போதே புறப்படுங்கள், போகலாம். உங்களுடைய செளக் கரியம் முழுவதும் ஒரு பிடியரிசிக் குக் காணம் போடுவதற்காகவா ஏற்பட்டது? உங்களைப் போன்றவர் எங்கள் அரண்ய ராஜ்யத்தில் இருந்தால் நூறு கன்னிகைகள் சூழ இருந்து பல்லே இளித்துக்கொண்டு நிற்பார்களே! வாருங்கள். போகலாம்' என்று அந்தப் பெண் குரங்கு இதற்கு உபதேசம் செய்தது. காட்டில் உள்ள சுதந்தா வாழ்க்கையின் இன்பங்களையும், காட்டு வளப்பத்தையும், குரங்கினங்கள் கூடிக் கோலாகலமாக வாழும் விதத்தையும் எடுத்துச் சொல்லி இந்தக் குரங்கின் மூளையில் ஒரு மயக்கத்தை உண்டாக்கிவிட்டது. அங்கப் பெண் குரங்கின்மேல் உண்டான மோகத்தைக் காட்டிலும் காட்டு வாழ்க்கையின் மேல் அதிக மோகம் உண்டாயிற்று இதற்கு. ஆனல் உடனே அந்தக் காட்டுக்குப் போகத் துணிவு உண்டாகவில்லை. என்னதான் ஒரே ஜாதியாக இருந்தாலும் அந்தக் குரங்கை நம்பலாமா? அப்போ தைக்கு ஒருவிதமாக கிதானித்துக்கொண்டு ஊரிலே தங்கி