பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரங்கின் சுதந்தரம் 37

லாமே! என்பதுதான் அந்த ஞானம், குங்கு இந்த யோசனை உதித்ததற்காகத் தனக்குத் தானே சபாஷ்' போட்டுக்கொண்டது. சமக்குப் புதிய இடமாக இருந் தாலும் பழைய சிநேகிதர்களைப் பிரியாமல் வாழும் வாழ்க்கை கிடைக்கும். சுதந்தாத்துக்கும் குறைவு இல்லை’ என்று எண்ணி, விடுதலைப் பிரசாரத்தைத் தன் நண்பர் களிடம் செய்யும் கைங்கரியத்தை ஒரு நாள் சாயங்காலம் ஆரம்பித்தது. .

‘'என் அருமை அண்ணுவே, உம்முடைய சுக செளந்தரியமும் உல்லாச கடையும் யாருக்கு உபயோகப் படுகின்றன? எல்லாம் உம்முடைய எஜமானனுக்கு அல்லவா? வேளை தவருமல் கொள்ளு வைத்தப் பாதுகாக்கிருன் என்று சொல்லுகிறீரே. கசாப்புக் கடைக் காரன் ஆட்டைக் கொழுகொழுவென்று வளர்க்கிரு. னென்ருல், அது ஒரு பிரியம் ஆகுமா? அவனுவது ஒரே நாளில் அதை வெட்டொன்று துண்டு இரண்டாக ஆக்கி, விடுகிருன். உமது எஜமானனுே உம்மை ஆயுள் முழுதும் வேலைவாங்கிச் சித்திரவதை செய்கிருன்; கொல்லாமற் கொல்கிருன், உம்முடைய வாயிலே கடிவாளத்தைப் போடும்போது முதலில் அது எதோ ஆபரணமென்று தான். நீர் நினைத்திருக்கவேண்டும். ஆனல் அது உம்முடைய சுதந்தரத்தை வே ரறுக்கும் வாளென்பது இன்று உமக் குத் தெரிந்திருக்குமே!’ இப்படி விடாமல் தன்னுடைய சாதுரிய வசனங்காேக் குரங்கு குதிரையின் காதில் ஒதிக் கொண்டு வந்தது. - . . . . . .

"இதை விட்டால் மக்கு வாழ்வு எங்கே?' என்று மெல்லக் கேட்டது. குதிரை. .