பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரங்கின் சுதந்தாம்

அதன் தைரியம் மாத்திரம் உனக்கு வரவில்லையே. காட்டு ஜாதி, நாட்டு ஜாதி என்று முகத்தில் எழுதி ஒட்டியிருக் கிறதோ? கட்டுப்பாடு இல்லாமல் மனம் போனபடி உலாவி, வேண்டிய உணவை உண்டு குவியாகக் காலங்கழிக்க ஏற் பட்டது காடு. அதைக் கண்டு மனிதப் பதர்களல்லவா பயப்படவேண்டும்? நமக்கு என்ன பயம்? அதுவும் உயிருக்கு உயிராகப் பழகிய நாம் நாலுபேரும் சேர்ந்து வாழும் இடத்தில் பயம் எங்கே வந்தது? காட்டை நாடாக்கி விடுவோமே. என்ன? உனக்குச் சம்மதமா, இல்லையா?”

'குதிரையண்ணு சம்மதித்துவிட்டாரா?” 'அட, நீ என்ன பெரிய சந்தேகப் பிராணியாக இருக்கிருய் குதிரையண்ணு என்ன கொம்பனே? அவன் தாத்தாவானுலும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ே சம்மதிக்காவிட்டால் எங்களுக்கு ஒரு கஷ்டமும் இல்லை. நாங்கள் மூன்று பேரும் புறப்பட்டுவிடுவோம். நீ தினம் ஒரு விதமான பூசை பெற்றுக்கொண்டு, குடிசையே சொர்க்கம், எஜமானனே தெய்வம் என்று இருக்க வேண் டியதுதான்!” - - -

"அத்தனை பெரியவர்களும் இத்தனை புத்திசாலியா கிய நீயும் தீர்மானம் செய்த பிறகு கான் குறுக்கே கிற். பேளு ஏதோ சந்தேகம் வந்தது. கேட்டுக்கொண்டேன். கோபித்துக்கொள்ளதே, தம்பி. என் விஷயத்தில் 腊 இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ளுகிருபே; நான் . உனக்கு என்ன பிரதியுபகாரம் செய்யப் போகிறேன்!”

உபகாரம் செய்யும் காலம் வரும்; அப்போது சொல் கிறேன்” என்று சொல்விவிட்டு மர்க்கடப் பிரசாரகர் காடியிடம் வந்து சேர்ந்தார். - x