பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கலைச் செல்வி

குடுகுடு கிழவனைப்போல, இதுவே போதும் என்று வேதாந்தம் பேசுகிறாயே I”

§ "அதென்ன சங்கதி? குதிரையும் கழுதையும் காட்டுக்கா வருகின்றன?

"ஆமாம்; காடென்றால் கசக்கிறதோ? நம்மோடு பழகினதற்கு அவர்களேயும் ஈடேற்றலாமென்று எண்ணி ஒரு வார்த்தை சொன்னேன். அவ்வளவுதான்; இப்போதே போய்விடலாமென்று துடித்துக்கொண்டிருக்கிறார்கள். என்ன இருந்தாலும் ஜாம்பவான் இல்லாமல் காரியம் நடக்குமா? உன்னிடம் வந்தேன்.”

'அடே அப்பா வெகு காரியம் செய்திருக்கிறாய் போல் இருக்கிறதே !'

'இதென்ன காரியம்? அங்கே போனபிறகு பார். எத்தனை அற்புதங்கள் செய்யப்போகிறேன்! நீ மட்டும் எனக்குத் தோள் கொடுத்தால் பழைய ராமாயணத்தையே கொண்டு வந்துவிடலாம்.’’

“சரி; அப்படியே செய்.”

  • நீ ?"

"நானும் வருகிறேன்."

                               3

சுதந்தர வாழ்க்கையை நோக்கி அந்த நான்கு பிராணிகளும் பயணமாயின. குரங்கு வழிகாட்டி முன்னே செல்ல அதை அடுத்துக் கரடி போக அதன் பின்னே கழுதையும் குதிரையும் சென்றன. விடியற்காலையில் முன் எற்பாடு செய்தபடி குரங்கு குதிரையை விடுவித்தது. கரடியையும் விடுவித்தது. கழுதையை யாரும் கட்டிப் போடவில்லை. நான்கும் புறப்பட்டன. -