பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரங்கின் சுதந்தரம் శ్రి

குரங்கு ஐம்மென்று கழுதையின்மேல் ஏறி உட் கார்ந்துகொண்டது. ஏதோ பெரிய பதவி கிடைத்து விட்டது போன்ற எண்ணம் அதற்கு ஏற்பட்டது. “ஒரு வாகனத்தின்மேல் ஏறிச் சவாரி பண்ணுவதென்ருலே ஜோர்தான் தெரியாமலா மனிதர்கள் குதிரையின்மேல் ஏறிச் சவாரி பண்ணுகிருர்கள்? -

இதுவரையில் எல்லாவற்றையும் கேட்டு வந்த குதி ரைக்குக் குரங்கின் காரியம் சரியாகப் படவில்லை. ஒன்றுக் கொன்று தோழமை பாராட்டும்போது ஒன்று வாகன மாகவும் மற்ருென்று அதன் மேல் சவாரி பண்ணுவதாக வும் இருப்பது முறையா? குதிரைக்குக் குரங்கினிடம் சந்தேகம் தோன்றியது; குதிரையின்மேல் மனிதர்கள் சவாரி பண்ணுவதைக் குரங்கு சுட்டிக் காட்டுவதில் ஏதோ அர்த்தம் இருப்பதாக அதற்குப் புலப்பட்டது. இப் போது கழுதையின் மேல் குந்தியிருக்கும் குரங்கு அடுத்த படி தன்மேல் வந்து குந்திக்கொண்டால்

இப்படி அதன் கினேவு படர்ந்ததுதான் தாமதம், சொல்லி'வைத்தாற்போல் குரங்கு விஷமத்தைக் காட்டத் தொடங்கியது; "குதிரை அண்ணு, என்ன மெளனமாக வருகிறீரே! கழுதை அண்ணுவின்மேல் அமர்ந்திருப்பதே இத்தனே சுகமாக இருந்தால், உம்மேல் சவாரி செய்வது. . எவ்வளவு இனிமையாக இருக்கும்!” என்று கேட்டது.

"அது மனித ஜாதியைச் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியது. குரங்கு மனிதனுக மாறுவதாகுல் குரங் குக்கும் ஒருகால் தெரியவரும்' என்று சுருக்கென்று குதி ைசொல்லிவிட்டது. .