பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரங்கின் சுதந்தரம் 8Ꮂ டது. கழுதையோ பின்னங்கால் இரண்டும் ஒன்றகுேடு ஒன்று முட்ட, நடுங்கத் தொடங்கியது. குதிரை எதோ யோசனையில் ஆழ்ந்தது. -

அப்போது காடி, "இரவில் நாம் எங்கே தங்குவது? என்று கேட்டது. -

'எங்கேயா இங்கேதான் தங்க வேண்டும்" என் றது குரங்கு.

“இங்கே இாவில் ஏதாவது மிருகம் வந்தால்?" “வந்தால் என்ன? நாமும் மிருகந்தானே?” "புலி சிங்கம் சிறுத்தை என்ற மிருகங்களைப்பற்றி ே கேள்விப்பட்டிருக்கி ருயா?” - 'கேள்விப்பட்டிருக்கிறேன்.' 'அவை நம்மைக் கண்டால் ஒரே அடியில் கொன்று விடுமே!’ . . ‘என்ன?’ என்று கழுதை திடுக்கிட்டது.

'மறைவாக இருக்கும் இடம் ஒன்றும் இல்லையா?" என்று கேட்டது குதிரை.

"மாத்திலே ஏறிக்கொள்ளலாம்' என்றது குரங்கு. 'உனக்கு மரமேறத் தெரியும். மற்றவர்கள் என்ன செய்வார்கள்' என்று கேட்டது கரடி,

"அவர்களுக்கும் பழக்கிக் கொடுத்தால் போகிறது" என்று குரங்கு சொன்னபோது, குதிரைக்குக் கோபம் கோபமாக வந்தது. "நீ வண்டி இழுக்கக் கற்றுக்கொள் ளும்போது நாங்கள் மரமேறக் கற்றுக்கொள்வோம்" என்று விடை பகர்ந்தது.