பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரங்கின் சுதந்தரம் క్షీ

இருவருமே ஆப்த நண்பர்களாக இருக்க முடியும், கழுதை ஒன்றுக்கும் உதவாத கழுதை, குதிரை மாத்திரம் என்ன? கொஞ்சம் பார்க்க அழகான கழுதை, அல்வளவுதானே? அவற்றைப்பற்றி நாம் அத்தனே அக்கறை கொள்ள வேண் டியதில்லை’ என்று குரங்கு பேசியது. .

“என்ன தம்பி, ਾਂ காட்டுக்கு வந்தவுடன் புத்தி பிசகிவிட்டதா? ஆசை காட்டி அவர்களை இங்கே அழைத்து வந்துவிட்டு, அவர்கள் உயிருக்கே அபாயம் சேரும்படியான சமயத்தில் கைவிடத் துணிகிருயே’ என்றது காடி.

'உன் இஷ்டம்போல் செய். நான் ஒன்றும் பேச

வில்லை' என்று குரங்கு அடங்கியது.

நெடுந்துாரம் போன பிறகு ஒரு சிறிய குன்று. இருக் தது. அதன் அடியிலே ஒரு குகை தென்பட்டது. 'அதற்குள் வேறு மிருகம் ஒன்றும் இல்லையா என்று பார்த்துவா” என்று கரடி குரங்கினிடம் சொல்லியது. அதற்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது: ஹல் ஹாடும்; நான் மாட்டேன்' என்று சொல்லிவிட்டது. . கரடியே உள்ளே போய்ப் பார்த்து ஒன்றும் இல்லை என்ற தெரிந்துகொண்டு வந்தது.

மறுபடியும் குதிரையும் தழுதையும் இருக்கும் இடம் வந்து, "இனிமேல் நாம் சந்தோஷமாக வாழலாம். உங் கள் இரண்டு பேருக்கும் பாதுகாப்பான இடம் கண்டு பிடித்துவிட்டேன். பகலெல்லாம் இஷ்டம்போல் இருக்து. வாழலாம். இரவில் நீங்கள் அந்தக் குகையில் யாதொரு o பயமுமின்றி இருக்கலாம்' என்று தைரியம் ஊட்டி அங்கே அழைத்துக்கொண்டு சென்றது.