பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கலைச் செல்வி -- - அன்று மாலை வயிருப் புல்லைத் தின்றுவிட்டுக் குதிரையும் கழுதையும் குகைக்குள் போயின. அதன் வாசலைக் கரடி ஒரு குண்டுக் கல்லால் அடைத்தது. பிறகு இரவுப் போதைக் குரங்கு ஒரு மரத்திலும் கரடி மற்ருெரு மாத்திலும் கழித்தன. இரவில் சிங்கம் கர்ஜிக்கும்போது குரங்கு பயந்து போய்க் கத்தும். மரத்திலிருந்து சுயாதீன மற்று விழுந்துவிடும். கரடி அதை எடுத்து மறுபடியும் மரத்தின் மேல் விடும். குகைக்குள் இருக்காலும் கழுதை மயக்கம் போட்டு விழும். குதிரையும் நடுங்கும்,

. . 4 - நாலந்து நாட்களில் அரண்ய வாழ்வு ஒவ்வொரு பிார்ணிக்கும் புளித்துவிட்டது. குதிரை வெறும் புல்லை மாத்திரம் தின்று ஜீவிக்க முடியவில்லை. பதமாக வெந்த கொள்ளைத் தின்று கொழுகொழுவென்று வளர்ந்த அதன் உடம்பு இளைத்துவிட்டது. இரவில் ஒரு சிறை, பகலில் ஒரு சிறையாக அதற்கு இருந்தது. கழுதைக்கே எந்தச் சமயத்தில் பகல் நேரத்தில் நரி வந்து தன் காலக் கடித்து விடுமோ என்ற பயம். அதோடு ஒவ்வோர் இரவும் சிங்கத் தின் கர்ஜனையைக் கேட்கும்போதெல்லாம் அதன் பிரா ணன் ஒருமுறை போய்விட்டு வந்தது.

குங்கு மாத்திரம் என்ன வாழ்ந்தது குடிசையிலே பிறந்த அதற்குக் காட்டில் வாழத் தெரியவில்லை. ஒக்கி உயர்ந்த மாத்தின் உச்சியில் ஏறத் தெரியவில்லை. மாத் துக்கு மரம் வேகமாகப் பாயும் பயிற்சியும் இல்லை. இது குரங்கு ஜாதிக்கே உரியதல்ல என்று காட்டுக் குரங்குகள் கினைத்துவிட்டன. அதனல் அதைக் கொன். விட எண்ணி அவை o, குழ்ந்துகொண்டன. கரடி காப்பாற் - விட்டால் அதன் உயிருக்கே மோசம் வந்திரு க்கும். -