பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கலைச் செல்வி

போது ஒரு கூலி, இறங்கும்போது ஒரு கூலி பேசிச் சண்டை பிடிக்கமாட்டான். வெட்டொன்று துண்டு இரண்டாக முதலிலேயே கூலியைப் பேசிக்கொள்வான். ‘எசமான் கொடுத்ததைக் கொடுங்க’ என்று சொல்லி விட்டு, மாடு மாதிரி இழுத்து வந்தேனே, இதுதாகு? என்று இறங்குமிடத்தில் தகராறு பண்ணும் வழக்கமும் அவனிடம் இல்லை. -

ஆல்ை, பாழும் கள்ளுக்குடியை அவனுல் உதறித் தள்ள முடியவில்லை. அதைக் கண்ணுலே கூடப் பார்க் கிறதில்லையென்று எத்தனையோ தடவை சாமி அறியச் சத்தியம் செய்திருக்கிருன். ஆனல் சரியாக ஏழு மணிக் குத் தன்னுடைய தோழர்கள் அடையாற்றுப் பக்கம் புறப் படும்போது அவனே அந்த கினேவு இழுக்கும். அவனும் அடிமையாகிவிடுவான். - -

அவனுக்கு இருக்கிற ஈயமான பேச்சுக்கு, வேறு வேலை ஏதாவது செய்து மானமாக வயிறு பிழைக்கலாம். லோகநாத செட்டியாரே அதைச் சொல்லியிருக்கிருரே. "என்னப்பா பெரிய வாய்ப் பந்தல் போடுகிருயே. ே ஒரு கடையில் இருந்தால் நல்ல பேர் வாங்கிச் சம்பளமும் வாங்கலாமே!’ என்பார். . - --

கடையிலா அவன் ஹரிஜன். அவனைக் கடையில் சேர்த்துக்கொள்ள அவ்வளவு தரம் இன்னும் ஒற்றுமை உணர்ச்சி வரவில்லையே! செட்டியார் சர்க்கரை வட்ட மாசப் பேசுகிருரே! அவர் கினைத்தால் ஏதாவது ஒரு வேலை பண்ணி வைக்கக்கூடாதா? அவருக்கு அவனைப்பற்றி என்ன கவலை: ரிக்ஷ ஏறும்போது அவனைத் தட்டிக் கொடுத்துப் பேசுவார். அவ்வளவுதான்; அதற்கு மேல் அவர் உண்டு, அவர் கமிஷன் வியாபாரம் உண்டு.