பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

憩 கலைச் செல்வி

பாதிச்சுக்கொண்டான். சே அது கிடக்கிறது. கசு மாலம் அதைப்பற்றி கினைத்தாலே ஆபாசம்.

எல்லம்மாள் பத்தினி. அவளுக்கு அவன் ஒன்றும் விசேஷமாக வாங்கித் தரவில்லை. அதனுல் அவனிடம் அவளுக்கு அலகூகிய புத்தி இல்லை. கள்ளைக் குடித்த வெறியிலே வீட்டுக்கு வந்தால், 'இன்னிக்குக் கோயி அக்குப் போனையாக்கும்.' என்று ஏளனச் போடு அவள் வரவேற்பாள். கள்ளுக்கடையேதான் கோயில் என்று சொல்வாள். ஆனல் அந்த வார்த்தை பாவாடைக்கு உண்மையில் கோயில் ஞாபகத்தை உண் டாச்கும். அவளே எல்லேயம்மனப்போலக் தோற்றுவாள். அவளிடம் ஏதோ சக்தி இருக்கிறது. இல்லாவிட்டால் அப் படி அவன் கண்ணுக்குத் தெரிவானேன்? அவன் ஒன்றும் பேசமாட்டான். பேசாமல் போய் முடங்கிக்கொள்ளு வான்.

ஒரு வார்த்தை கடுகடுப்பாகப் பேசுவாளா? ஒருநாளா வது அவனுக்குச் சோறு போடமாட்டேனென்று சொல்லி யிருப்பாளா? - - -

அடுத்தாற்போல் கந்தன் சமாசாரம் என்ன? அவன் தினசரி எட்டணு வீட்டுக்குக் கொடுத்துவிடுகிருன். அவன் கொடுக்காவிட்டாலும் ஸ்டாண்டுக்கே வந்து அந்தப் பெண்பிள்ளை சண்டைபோட்டு வாங்கிக்கொள்வாள். பெண்பிள்ளையா அவள் பேயல்லவா? நாலுபேருக்கு நடு வில், நடு ஸ்டாண்டில் அவள் பேசுகிற பேச்சு, மனிசன் கேட்கமாட்டான்; அப்படிப் பேசுவாள். அவளேக் கந்தன் கட்டிக்கொள்ளவில்லையாம்; சேர்த்துக்கொண்டு வந்தவ ளாம். அகளுல்தான் கூலிக்காரியைப்போல் அன்றன்று பணம் வாங்கிக்கொள்கிருள்.