பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடன்காரன் 控慧

ஆமாம்! கட்டின பெண்டாட்டி மட்டும் வாழ்ந்தாளாக் கும் முனியன் பெண்சாதி சமாசாரம் என்ன? அவளே அவன் கட்டிக்கொண்ட கதையை அவன் எவ்வளவு சுவா ரஸ்யமாகப் பாவாடையிடம் சொல்லியிருக்கிருன்! அவள் அவனுக்கு மாமன் மகளாம். அவளை அவளுடைய அத்தை மகன் கட்டிக்கொள்ளப் பார்க் காணும். சண்டை, பூசல், அடிதடி எல்லாம் கடந்து, கடைசியில் அந்தப் பெண்பிள்ளை இவனேடு ஓடிவந்துவிட்டாளாம். எங்கேபோ போயிருந்து ஒரு மாசத்துக்கப்புறம், இவனுடைய அப்பன் சமாசாரம் சொல்லியனுப்பினுளும். ‘மானம் போகிறது; அந்தப் பிள் ளே யையே அவன் கட்டிக்கொள்ள ட்டும். செய்கிற சாங்கி பத்தைச் செய்து ஒரு தாலிய்ைக் கட்டி எங்கேயாவது அழைத்துக்கொண்டு தொலேயட்டும் என்று கிழவன் சொல்லியனுப்பின பிற்பாடுதான் இவன் அவளேயும் அழைத்துக்கொண்டு போய்ச் சாமிக்கு முன்னலே தாலி. யைக் கட்டிகுைம். இந்த ஊருக்கு வந்து இரண்டு வரு ஷங்கூடச் சரியாக ஆகவில்லை; அதற்குள்ளே சண்டை. அடே அப்பா, அவள் பண்ணுகிற அட்டகாசம் இவன் கொடுக்கிறது எட்டன. அவள் வைத்துக்கொள்கிற பூவே எட்டனவுக்கு மேலே போகும்போலே இருக்கிறதே! அதற்கும் அவள் துணிக்கும் வேண்டிய பணத்துக்கு. என்ன செய்கிருள் இவனைப் பார்த்தால் பஞ்சத்திலேஅடிபட்டவன் போலே இருக்கிருன். அவளே மாசாத்தி மாதிரி இருக்கிருள். எத்தனையோ ராத்திரி ாேட்டு மேடை விலே இவன் விழுத்து கிடக்கிருனே; குடித்தனக்கான் - வேலையா இது பெண் சாதி படைத்தவன் ராத்திரியிலே விதியிலே கிடந்து புளுவானேன்? அதிலே என்னவோ ரகசியம் இருக்கிறது. கட்டின பெண்டாட்டிதான்; மனசு,