பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடன்காரன் 55

“போதும் போதும்' எறு தன் மெலிந்த கையைத் துக்கினுள் எல்லம்மாள். அதை எடுத்து அவன் தன் கண் ணில் ஒத்திக்கொண்டான்.

"கொதிக்கிறதே' என்ருன் அவன்.

"கைக்கு ஜில்லுனு இருக்குதே!” என்ருள் அவள். ஆம், அவன் கண்ணிர் அவள் கையை சனத்தது.

2

மறுபடியும் வாழ்க்கையைப் புதிதாக ஆரம்பிக்கத் திடமான சங்கற்பம் செய்துகொண்டான் பாவாடை. லோகநாக செட்டியாரிடம் அஞ்சு ரூபாய் கடன் வாங்ெ எல்லம்மாளுக்கு வேண்டிய மருந்தை வாங்கிக்கொடுத்து அவள் உடம்பைத் தேற்றிவிட்டால், அப்புறம் சொர்க்க போகம் அவனுக்கு w -

'குடிகாரனே யாரும் நம்பமாட்டார்கள்'-இந்த உண்மை அவனுக்கு முன்பே தெரியாதா? நன்ருகத் தெரி யும். ஆனல் அவன் மனசில் உறைக்கவில்லை. இப்போக தான் உறைத்தது. எல்லம்மாள் தனக்கு வந்த வியாதிக்கு அஞ்சவில்லை. அடையாற்றுச் சாலைக்கு அவன் போவானே என்றுதான் அஞ்சினுள். அவன் அவள் மனசிலே கொடிய வியாதியை உண்டாக்கிவிட்டான், அவள் அஞ்சுகிருள்; செட்டி யார் அவகம்பிக்கை கொள்கிரு.ர். இாண்டுக்கும் . காரணம் ஒன்றுதானே? -

அவனுக்கு உடம்பு குலுங்கியது. வியர்த்தது. செட்டியார் கெளரவ மனிதர்களின் பிரதிநிதியாக கின்று, “நீ குடிகான்; தமபத் தகாதவன்: தீண்டத் தகாதவன்; பேசத் தகாதவன்; உபகாரம் பண்ணத் தகாதவன்” என்று குற்றம் சாட்டுவதுபோல இருந்தது. குடிகாரர்கள் பெண்