பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடன்காரன் 57

'எனக்கு வட்டிகிட்டி வேண்டாம். நீ ஏழை; பிழைத் துப் போ. சமயத்துக்கு ரிக்ஷாக் கொண்டுவா. நான் இ ை மாக ஏறவில்லை. இன்னுெருத்தலுக்குக் கொடுக்கிற காசை உனக்குக் கொடுக்கிறேன். நீ புத்தியாகப் பிழைத்தால் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன்.” -

இந்தக் கேன் போன்ற மொழிகளோடு ரூபாய் ஐந்து கடனுகக் கொடுத்தார் செட்டியார்.

அவனுக்கு உண்டான சந்தோஷத்திற்கு எல்லை இல்லை. வீட்டிற்கு ஒடினன். எல்லம்மாளிடம் குதுகலத் தோடு பேசினன். -

'அஞ்சு ரூபாயைத் திருப்பித் தருகிற வரைக்குமா வது கள்ளுத் தண்ணீரை மறந்து இருக்க வேண்டும்" என்று அவள் ஞாபகம் மூட்டினுள். * . . .

“இந்த எல்லம்மா, திருப்பி அப்படிப் பேசாதே. கான் என் ஆபுசுக்கும் அந்தச் சனியன் முகத்தில் விழிக்க மாட்டேன்’ என்று சொல்லிவிட்டுக் கடைக்குப் போனன். . வைத்தியனிடம் போனன். மருந்து வாங்கினன். எல்லம் மாளுக்கு உபசாரம் செய்தான்.

ஆண்டவன் கருணை பாலித்தான். எல்லம்மாள் நோய் o நீங்கி எழுந்தாள். r ‘. . . கடனைக் கட்ட வேண்டுமென்ற ஒரே தீவிர கோக்கத் தில் அவன் உழைத்தான். செட்டியார் சமயத்தில் உதவின ரென்ற நன்றியறிவினுல் அவர் எப்போது கூப்பிட்டாலும் போய் ரிக்ஷாவில் ஏற்றிக்கொள்வான்.

லாபமே கண்ணுக வாழ்கிறவர் செட்டியார். கால ணுக் கொடுக்கவேண்டிய இடத்தில் இரண்டனக் கொடுப்

பார். பாவாடை ஒன்றும் பேசாமல் வாங்கிக்கொள்