பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#9 கலச் செல்வி

நாணயம் போய்விட்டால், பிறகு வராது. அதனுல்தான் உங்களுக்கு ஞாபகப்படுத்த வந்தேன்.

"சரி, சரி, பார்க்கிறேன். நான் அவசரமாக வெளி விலே போகவேண்டும்’ என்று சொல்லிச் செட்டியார் அவரை அனுப்பிவிட்டார். ஆனல் வேறு யாரோ ஒருவர் கையில் ஒரு கற்றை காகிதத்தை வைத்துக்கொண்டு வந்து சேர்ந்தார். :

'என்ன ஸ்ார், மூன்று மாசத்துப் பில் பாக்கி கிற் கிறது. டாக்டர் கொஞ்சம் ஞாபகப்படுத்தச் சொன்னர்' என்று வந்தவர் செட்டியார் கையில் ஒரு பில்லேக் கொடுத்தார். -

செட்டியார் அதைத் தலைகுனியாமலே கம்பீரமாகப் பார்த்தார். “பூ! இதுதான? நூறு ரூபாய்தானே ஆகி யிருக்கிறது? இதுதான பிரமாதம் என்ன ஐயா, உங்கள் டாக்டர் பெரிய மனுஷர்களிடமெல்லாம் பழகுகிருர்; இந்த நுாறு ரூபாய் இல்லாமல் கஷ்டப்படுகிரு.ரா, என்ன? இப்போதென்ன அவசரம் சேர்ந்தாற்போலே கொடுத்து விடலாமென்று எண்ணியிருக்கிறேன். நாலு ரிக்ஷாக் கார்களுக்குக் கைம்மாற்றுக் கொடுத்த பணம் காணுகே இது' என்ற சொல்லிக்கொண்டே ரிக்ஷாக்காரப் பாவா டையைப் பார்த்துச் சிரித்தார் செட்டியார். பில் கலெக்ட் ரும் திரும்பிப் பார்த்தார். .

அவர் போனவுடன் மளிகைக் نیساه பையன் வக் தான்; 'கடைக்காரச் செட்டியார் சாமான் வாங்கின ரூபாய் ஐம்பதும், கைம்மாற்ற வாங்கின ரூபாய் நாம் உடனே வேண்டுமென்று சொல்லச் சொன்னர் கைம் மாற்று ரூபாயையாவ உடனே வாங்கி வரச் சொன்

னுர்' என்ருன்.