பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபாவளி விருந்து §§

மும் காம் சாப்பிடக்கூடாது. பிழைத்துக் கிடந்தால் அடுத்த வருஷம் நன்முகக் கொண்டாடலாம்' என்று அவள் சொன்னுள். - -

“சரிதான், அம்மா' என்று நல்ல பிள்ளேயாகிய கோபாலன் ஒப்புக்கொண்டான். ५२ அவன் வாய் மூடவில்லை; அதற்குள் அவனுடைய கம்பெனி மானேஜர் ராமதுரை வந்தார். "என்ன கோபர் லன், நாளைக்கு உங்கள் வீட்டில் தீபாவளி இல்லையாமே! நாளேக்கு நம் வீட்டுக்கு வந்துவிடும். அங்கேயே சாப்பிட லாம்' என்று சொல்லிக்கொண்டே வந்தார். அவர் மானே ஜர்; அவன் உதவி மானேஜர் இரண்டு பேரும் அன்னி யோன்னியமாகப் பழகுகிறவர்கள்.

கோபாலன் பேசவில்லை; அவன் தாய் சமையலறைக் குள் இருந்தாள். அவள் காதில் மானேஜர் கூறிய வார்த்தைகள் விழுந்ததும் அவளுக்குத் தூக்கிவரிப் போட்டது. கோபாலன் பதில் சொல்லாமல் இருக்கவே ராமதுரை, “என்ன யோசிக்கிறீர்? தம்பதி சமேதராக வத்துவிடும்; அவர்களுக்குத் தனி அழைப்பு வரும். நான் போய் அனுப்புகிறேன்" என்ற வற்புறுத்தினர்.

கோபாலன், “இல்லை; அப்பர் காலமாகி இன்னும் ஒரு வருஷம் ஆகவில்லை, பண்டிகை கொண்டாடுவது உசிதம் அல்ல.......” என்று இழுத்தாற் போலப் பேசிஞன்.

“அகளுல்தானே நான் கூப்பிடுகிறேன்! அடுத்த வருஷம் உம்மைக் கூப்பிட்டால் வருவீரா? இக்க் வரு فاقية நேர்ந்து கொண்டது. உம் வீட்டில் பண்டிகை இல்லை. சரி, வந்து விடுகிறீரா? சிக்கிரம் சாப்பாடு ஆகிவிடும்."

5 -