பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபாவளி விருந்து * 69

மானேஜர் மனைவி வந்தபோது அவள் உள்ளத்தின் கிலை மாறுதல் அடைந்திருந்தது. கோபாலன் சொன்ன சமாதானங்கள் அவளுடைய கோபத்தை ஒரளவு ஆற்றின. அதோடு வந்தவளுடைய சுபாவத்தை உணர்ந்தபோது சாந்தம் உண்டாயிற்று. இப்போது தன் குழந்தை' மனசுக்கு வருத்தம் ஏற்பட்டுவிட்டது என்பதைக் கவ னித்தபோது அவள் ஒரு படி இறங்கியே வந்துவிட்டாள்.

‘' கோபாலா, s வருத்தப்படாதே! மானேஜர் நல்லவ ராக இருக்கலாம். நான் தப்பாக எண்ணிவிட்டேன். நீ மாத்திரம் அவர் வீட்டுக்குப் போய்விட்டு வா. ஆளுல்

பருப்பு பாயசம் மாத்திரம் சாப்பிடவேண்டாம் !'

"அந்தத் தொல்லை எதற்கு, அம்மா ? சான் வரவில்லை என்று சொல்லி அனுப்பிவிடுகிறேன்.' -

落 響 歌 懿

இப்போது காற்றுத் திசை மாறி அடித்தது.

அப்படி அல்ல; மரியாதைப்பட்ட மனுஷர் என்ற சொல்கிருய். அவர் பேச்சைத் தட்டுவது நல்லதல்ல. நீ போய்க் கையை கனைத்துவிட்டு வந்துவிடு...எனக்கு என்ன தெரியும், அடுப்பங்கரையில் இருப்பவளுக்கு? நாலு பேரோடு பழகுகிறவன் .ே நாளேக்கு அவர் முகத் தில் விழிக்கவேண்டியவன் .ே ஆகையால் .ே நாளேக்குப் போய்விட்டு வா. தட்டவேண்டாம். பாயசத்தை மாத்திரம் இலையில் ஒதுக்கிவைத்துவிடு.”

இப்போது ஸ்வரம் இறங்கிவிட்டது. பருப்பும் பாய சமும் சேர்ந்து பஹறிஷ்காரம் செய்தது போய், Lf席、 பஹறிஷ்காரம் மாத்திரம் கின்றது. . . . . . . . . . . .