பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபாவளி விருந்து 71

சம்பாஷணை படர்ந்துகொண்டே சென்றது. பேச்சுச் சுவாரஸ்யத்தோடு தட்டிலிருந்த பகடினங்களும் காலி யாயின. காபி சாப்பிட்டுவிட்டுக் கோபாலன் புறப் பட்டான். 'சாப்பாடு?’ என்ற கேள்விக்கு, "வேறு இடம்” என்று வேகமாகப் பதில் அளித்துவிட்டு அவன் வேறு நண்பர்களை நோக்கிப் புறப்பட்டான்.

அவனுடைய அத்தங்காள் வீட்டுக்குப் போன்ை. அஞ்சு கிமிஷப் பேச்சுத்தான். அதற்குள் இரண்டு கட்டுப் பகடினத்தை விழுங்கிவிட்டான். அடுத்தபடி சிநேகிதன் தண்டபாணி வீடு. அங்கே எல்லாம் தேங்காய் எண் ணெய் மயம். அங்கும் கொஞ்சம் ருசி பார்த்தான்.

馨 響 - 蘇 。蒙

மத்தியான்னம் மானேஜர் வீட்டில் சாப்பாடு, பாயசத்தை ஒதுக்குவதாவது அங்கே பாயசமே இல்லை; சர்க்கரைப் பொங்கல்தான். 'என்ன லார், இந்தக் குருட்டு நம்பிக்கையெல்லாம் ? நீங்கள் இதைச் சாப் பிட்டதாகச் சொல்லவேண்டாமே!” என்று சிரித்துக் கொண்டே உபசரித்தார் மானேஜர். ஒரு பதார்த்தமும் குறைவின்றி விருந்துண்டான்.

பிற்பகல் சில நண்பர்கள் வீட்டுக்குப் போனன் ; தீபாவளி அழைப்பு வந்ததற்காகவும், பார்க்கவேண்டும் என்பதற்காகவும் சில வீடுகளுக்குப் போனன். ஆபீஸ் விஷயமாக இரண்டோரிடங்களுக்குப் போகவேண்டிய அவசியம் ஏற்பட்டது. மாமனர் ஊரிலிருந்து எழுதிய சமாசாரத்தைக் கவனிக்கச் சில பேரைப் பார்க்கவேண்டி யிருந்தது. எல்லாம் லீவு நாளிலேதான் கவனிக்கவேண் டும். தீபாவளியில் எல்லோரும் அவரவர்கள் வீட்டில் இருப் பார்கள். மிகவும் செளகரியமான தினம் அல்லவா? .