பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைச் செல்வி -

டான். எத்தனையோ பேர்களின் ஆடலேப் பார்த்து இன் புற்ற அவனுக்கு மழலைச்சிலம்பின் நடனத்தில் எங்கும் காணுத பேரழகு புலப்பட்டது. நடனக் கலைக்காகவே படைக்கப்பட்ட அழகியோ அவள்? அவளுடைய ஒவ் வோர் அங்கமும் லயத்தில் லயிக்கிறதே. அவற்றின் அசை விலே கலை அலைஅலேயாகப் பொங்கிக் காண்போர் நெஞ் சைக் கவர்கிறதே. கலயைப்பற்றித் தெரியாதவனேக்கூட அடிமையாக்கி விடுகிறது.

அவள் ஆடலில் ஒரு முக்கியமான விசேஷம் அவள் கடமிடும்பொழுது பார்ப்பவர்கள் உள்ளமெல்லாம் கலைமய மாகிவிடும். அவளுடைய அழகும் அங்க சோபிதமும் இன்னிசையும் சதியும் நடனத்தின் உறுப்புகளாக ஒன்று பட்டுப் பூரணமான இன்பத்தை அளித்தன. அவற்றின் சமுதாய ஆனந்தத்தை, கூட்டு இன்பத்தைத்தான், நகர முடியுமேயன்றி அவற்றை வேறு பிரித்துப் பார்க்க இய. லாது. அவள் நடனம் செய்யும்போது அவள் அழகை மாத்திரம் பார்த்து வலிப்பது முடியாத காரியம், கடன் ఃశివు பூரணமான, நிலையில் கண்முன்னே உருவெடுத்து வந்ததாகத் தோன்றும். இன்னும் விளக்கமாகச் சொல்லப் போனல் அவள் ஆடும்போது காண்போர் உள்ளம் அந்த ஆட்டத்தில் இணைத்து தாளம் போடும்;: லயித்து விடும். ஆடுபவள், பார்க்கிறவர்கள் எல்லோரும் ஒன்று பட்ட அந்தச் சமயத்தில் அவள் அழகி, அவள் இனிய குரலையுடையவள். என்று வேறு பிரித்துப் பார்க்க வகை இல்லை. அவ்வளவு உயர்த்தது அவள் கல்.

... : :- குமாகுலோத்துங்கன் உள்ளத்தை அவள் பறித்துக் கொண்டாள். அவள் கதைான் முதலில் அங்கன் இழுத் தது. ஆடல் பாடல் அழகு என்ற மூன்றும் இன்தே