பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய படம் 75

சில காலம் இந்த அவாந்தரப் பேர்வழிகளிடம் இருந்தால், ஒரு காலத்தில் பிரசித்தி பெற்றிருந்த ஜமீன் தரைமட்ட மாகிவிடுமென்று இரங்கித் துப்புத் துலக்கி வியாஜ்ய விவ காரம் பண்ணி இந்தப் பிள்ளையை முன்னுக்குக் கொண்டு. வந்திருக்கிருர்கள். - -

காமைய நாயக்கர் ஒரு விதமாக வறுமையிலே வளர்ந்தவராகையால் அவருக்கு மூளைப் பலம் அதிகமாக இருந்தது. அவருக்கு ஜமீன் கிடைக்குமென்று முன்பே தெரிந்திருந்தால் ஒருகால் அவரும் சுகபோகங்களை அது. பவிக்க மாத்திரம் தெரிந்துகொண்டிருப்பார். நல்ல வேளை யாக அவருக்கு இளமையில் கெட்ட காலம் இருந்தது. இப்போது கஷ்ட நஷ்டங் தெரிந்து, ஏழை எளியவர்கள் கிலே தெரிந்து, பசி தாகத் தெரிந்து, பழி பாவத்துக்குப் பயப்பட வேண்டுமென்று தெரிந்து, பக்குவப்பட்ட மன. சோடும் மேலும் மேலும் உழைக்கவேண்டும், நல்ல பேர் வாங்கவேண்டும் என்ற ஊக்கத்தோடும் அதற்கேற்ற இள மையோடும் வந்திருக்கிருர். குடிகளுக்கெல்லாம் பரம சந்தோஷம். - . . .

கூழைப்பட்டி ஜமீனப்பற்றிய சரித்திமம் புத்தக ரூபா மாக ஒன்றும் இல்லாவிட்டாலும், அந்த ஊரிலும் ஜமீனச் சார்ந்த சுற்று வட்டங்களிலும் கர்ண பரம்பரையாகச் சொல்லிக்கொள்ளும் வரலாறு மாத்திரம் ஒரு பெரிய சரித். திரப் புத்தகத்துக்குப் போதுமானது. அவர்களுக்குக் கி.பி., கி. மு. கணக்குத் தெரியாது. அந்தக் கர்ண பரம் பரைச் சரித்திரம் கலிகாலத்துக்கு முன்பு போகவில்லை; புராணமாக இருந்தால் கிருத யுகத்திலிருந்து ஆரம்பித். திருக்கும். ஏதோ ஒரு காலத்தில் சேர சோழ பாண்டியர் களுக்குள் சண்ட்ை மூண்டதாம். யாரோ ஒரு வீரன்