பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய படம் 77

தன் பெயரை இழக்கவில்லை: இன்றும் அது அரண்மனை தான். தம்முடைய ஜமீனிலுள்ள கிராமங்கள், கிராமங் களிலுள்ள நிலங்கள், எரிகள், குளங்கள், கோவில்கள், சுடு, காடுகள் ஒன்றுவிடாமல் பார்த்துவிட வேண்டுமென்பது அவர் ஆசை. தமக்குச் சொந்தமான கட்டடங்களையெல் லாம் ஆராய்ந்து அரண்மனையின் மூல முடுக்குகளெல்லாம் துருவிப் பார்த்து, என்ன என்ன அபூர்வ வஸ்துக்கள் கிடைக்கின்றனவோ அவற்றையெல்லாம் சேகரித்து வைக்கவேண்டும்; சம்ஸ்தானத்திலுள்ள தஸ்தவேஜுகளி லிருந்தும் கர்ண பரம்பரையாக வழங்கும் செய்திகளிலிருந் தும் ஜமீன் சரித்திரத்தை எழுதச் செய்ய வேண்டும்-இப் படி என்ன என்னவோ செய்ய எண்ணினர்.

அரண்மனையைப் பரிசோதிக்கப் புறப்பட்டார். தஸ்த வேஜுக் கட்டுகளைப் பார்த்தால் எல்லாம் வியாஜ்யக் கட்டுகள்; வீண் சண்டைகளில் பணத்தை வாரி வாரி இறைத்த வயிற்றெரிச்சலை விளக்கும் காகிதங்கள். இடை யிடையே கறையான்கள் பல காலமாகத் தம்முடைய சங் கார கிருத்தியத்தை நடத்திக்கொண்டிருந்தன. Hழு, பூச்சி, வெளவால் முதலிய் படைகளை விரட்டுவதற்கு அவர் மேற்கொண்ட பிரயாசையால் ஒரு சைனியத்தையே போராடி ஒட்டிவிடலாம். இந்த நம்பர்க் கட்டுகளும், கறையான்களும் என்ன சரித்திரத்தை வெளியிடப் போகின்றன? அந்தக் குப்பை கூளத்தை ஆராய்க்க ஜமீன்தார் சலித்துப் போளுர், . . . '. ஒடிந்த பூட்டு, பழைய காலத்துக் கொக்கித் திறவு. கோல், உருண்டைக் கல் ஒன்று, கூழை மண்டலாதிபதி ஜகவீரபாண்டிய நாயக் கர்மேல் காதல் பிரபந்தம்-இப் படியாகச் சில சாமான்கள் கிடைத்தன. அவற்றை