பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2ö" கலைச் செல்வி

எடுத்துப் பத்திரப்படுத்தினர். ஜகவீர பாண்டிய நாயக்கர் காதலென்ற பிரபந்தம் கிழித்தும் குறைபட்டும் இருந்தது. காடாக் காகிதத்தில் எழுதப்பட்டிருந்த அந்தப் பிரதியைக் கண்டபோது ஜமீன்தாருக்கு இழந்த தனத்தைப் பெற் றது போன்ற ஆனந்தம் உண்டாயிற்று, சரித்திரம் எழுது வதற்கு உபயோகமாக இது ஒன்ருவது அகப்பட்டதே என்ற ஆறுதல் பெற்ருர். அவரே தமிழில் இலக்கிய அறிவு படைத்தவர். ஆகையால் அதை தன்முகப் பிரதி பண்ணச் செய்து படித்துப் பார்த்தார். ஆதியந்தமில்லாத அந்தப் பிரதியின் இடையிடையே கூழை மண்டலத்தின் பெயரும் ஜகவீர பாண்டிய காபதியின் பிரதாபமும் காணப்பட்டன. காலமோ, மற்ற விவரங்களோ ஒன்றும் தெரியவில்லை. அந்த மகாராஜா ஒரு பெண்ளுேடு ஸ்ரஸ் ஸல்லாப லீலை களே நடத்திய வருணனைதான் பிரமாதமாக இருந்தது. அதைப் பார்க்கையில் ஜமீன்தாருக்கு எரிச்சலாக வந்தது. 'ஜமீன்தார்களின் சிங்கார விலைகளுக்கு இலக்கியம் வேரு?" என்று எண்ணிச் சிரித்தார். - * .

. அரண்மனை முழுவதும் சோதனை போட்டதில் . விசேஷமாக ஒன்றும் கிடைக்கவில்லை. கிழவர்களையெல் லாம் கூப்பிட்டுப் பழங்கதைகளைக் கேட்கத் தொடங்கினர். பாரத ராமாயண காலத்திலிருந்து ஆரம்பித்தார்கள் அவர் கள். அவர்கள் சொல்வதைக் கேட்க எவ்வளவோ பொறுமை வேண்டியிருந்தது. ஜமீன்தாரின் இளம் பருவ முறுக்கிற்கும் மனே வேகத்துக்கும், அந்தக் கிழவர்களின் ஆமை நடைக்கும் ஒத்துவாவில்லை. ஆலுைம் ஜமீன்தார் . பல்லைக் கடித்துக்கொண்டு கேட்டு வந்தார். W -

ஒரு கிழவன் ஒரு ரகசியத்தைச் சொன்ஞன். ஜமீன் தாரைக் தனியே அழைத்துச் சென்று மூன்ரும் பேர்