பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய படம் - 84

வற்றையும் ஒன்றுவிடாமல் பார்த்துவிட வேண்டுமென்ற சிரத்தையோடு பெட்டியிலுள்ள சாமான்கள் அவ்வளவை யும் ஜமீன்தார் தம் அரண்மனைக்குக் கொண்டு போனுர். ஒவ்வொரு துண்டாகப் பார்க்க எண்ணி ஒலைச் சுவடிகளை யும் காகிதங்களையும் தனித்தனியே பிரித்து வைத்தார். அர் தக் குவியலில் ஏதோ ஒரு துணிச் சுருள் பாதி கறையானுல் சின்னப்பட்டு இருந்தது. எடுத்துப் பிரித்துப் பார்த்தார். பிரமித்துப் போனர். ஒர் அழகான சித்திரத்தின் ஒரு பகுதியாக இருந்தது. எவ்வளவு காலத்துக்கு முன் எழுதப் பட்ட ஒவியமோ தெரியவில்லை. ஆனல் வர்ணங்கள் மிகப் பொருத்தமாகவும் மங்காமல் விளக்கமாகவும் இருந்தன. மிகச் சிறந்த ஒவியப் புலவன் ஒருவன் எழுதியதென்பதற் குச் சந்தேகமே இல்லை. ஒரு பாதிக்கு மேல் கோணல் மாண்லாக அரிக்கப்பட்டுப் போயிருந்தது. -

படம் யாரோ ஒரு ஜமீன்தாருடைய படத்தானென்று தீர்மானித்தார் காமைய நாயக்கர். முகத்தின் இடப் பக்கம் மாத்திரம் இருந்தது; இடப் பக்கத்து வாய்க்கு மேல் மீசையும் இருந்தது. ஒரு கால் இடக்கால் மாத். திரம், இடுப்பும் அதற்கு மேல் வயிறும் ஒரமாக மாத்திரம். அரித்திருந்தது. அந்தப் பாதி சொரூபத்திலேயே உரு வத்தின் விாமும் அழகும் உடலுறுப்புக்களின் வன்மையும் புலப்பட்டன. ஆடைகளின் பாணியைப் ப்ார்த்தால், பழைய காலத்துச் சிற்றரசர்களுடையதைப் போல் இருந்தது. - -

காமைய நாயக்கர் அதைக் கண் இமையாமல் பார்ச் தார். அந்தப் படம் முற்றும் கிடைக்காமல் போனதில் அவருக்கு உண்டான வருத்தம் இவ்வளவு அவ்வளவு அல்ல. - உலகத்திலே .. கறையானுடைய வம்சத்தையெல்