பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ತಿಃ கலைச் செல்வி

லாம் நாசமாக்க வேண்டுமென்று ஆத்திரம் உண்டாயிற்று. கடவுளால்கூட அது முடியாதே! அவர் மனிதர், என்ன செய்யக்கூடும்?

படத்தின் மிச்சத்தை ஒவ்வோர் அணுவாகக் கூர்ந்து கவனித்தார். பார்க்கப் பார்க்க அதன் அழகு அதிகமாகப் புலப்பட்டு வந்தது. அதே சமயத்தில் அது முற்றும் இல்லையே என்ற குறைபாடும் அவருக்குத் துக்கத்தை உண்டாக்கியது. இனிமேல் என்ன செய்வது' என்று பெருமூச்சு விட்டார். . . . . . . . . . . . . . அந்தப் படக் கிழிசலைப் பத்திரமாக வைத்துவிட்டு மேலும் ஆராய்ச்சி செய்யும்போது ஏதோ ஒர் ஒலநறுக் கில், "கூழை மண்டலாதிபதி பாண்டியர் மானங்காத்தான் ரீ காமைய பாண்டிய மகாராஜா அவர்கள் திருவுருவக் கிழி தம்முடைய உருவத்தைக் கிழியிடலாகாதென்று மகாராஜா உத்தரவாகையினுல் இந்தக் கிழி உதவவில்லை. கடவுள் காக்க!” என்ற வரிகள் காணப்பட்டன. ஜமீன் தார். சந்தோஷ் அருவியிலே துள்ளிக் குதித்தார். தம் முடைய பரம்பரையின் முதல்வரை நேரே கண்டுவிட்ட வரைப் போன்ற ஆனந்தம் அடைந்தார். இவரா காமைய பாண்டியர் ஆகா, என்ன அழகு பார்த்தவுட னேயே தெரிகிறதே வீரத் திருமேனி யென்று அந்த இடப்பாகச் சித்திரமே சொல்லுகிறதே! ஐயோ! சித்திரம் முழுசாகக் கிடைக்கக்கூடாதா? என் துரதிருஷ்டம் முன். இருந்த பாவிகள் இந்த அருமையான படத்தை இப்படி காசமாகும்படி செய்துவிட்டார்கள். இந்த வீரசிங்கத்தின் படத்தை அரண்மனையில் வைத்துப் பூசை செய்யவேண் டாமா: படத்தைத்தான் எவ்வளவு அழகாக எழுதியிருக் கிருன் சித்திரகாான் அந்த அழகுக்காவது இதைப் போற்