பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய படம் 83

றிப் பாதுகாத்திருக்கவேண்டாமா? இந்த ஜமீனக் குட்டிச் சுவாக அடித்தது போதாதென்று இத்தகைய கலைப் பொருள்களையுமா நாசமாக்க வேண்டும்?' என்று என்ன என்னவோ கூறிப் புலம்பினர் காமைய நாயக்கர்.

"இனி என்ன செய்யலாம்? இந்த அரைகுறைப் படத்தை வைத்துக்கொண்டு ஏதாவது செய்ய முடியுமா? இடப் பக்கத்தைப் போல வலப்பக்கத்தையும் எழுதச் சொல்லி உருவத்தைப் பூர்ணம் செய்துவிடலாமே?” என்று எண்ணும்போது அவருக்கு ஒரளவு நம்பிக்கை உதயமாயிற்று. உடனே தக்க சித்திரப் புலவர்களை வரு வித்து அதைக் காட்டலானர். அவர்கள் யாவரும் அந்தச் சித்திரத்தை வானளாவப் புகழ்ந்தார்கள். வர்ணங்களின் சேர்க்கையைப் பாாட்டினர்கள். “யாராவது மேல்நாட்டு ஆராய்ச்சிக்காரர் கையில் இது கிடைத்தால் இதைப்பற்றி ஒரு புத்தகமே எழுதிவிடுவார். அவ்வளவு அருமையாக இருக்கிறது' என்ருர்கள். - - - - -

"கம் கையில்தான் கிடைத்திருக்கிறதே. இதைப் பார்த்து, இதே மாதிரி வர்ணங்களை உபயோகித்து இதன் குறைப் பகுதியையும் ஊகித்து அமைத்துச் சித்திரத்தைப் பூர்த்தி செய்து தருவீர்களா?' என்று ஜமீன்தார் கேட்டார். - -

"ஏதேது! அது மிகவும் கஷ்டமான காரியம். இதை இப்படியே போட்டோ எடுத்து மேல்நாட்டுப் பத்திரிகை களுக்கு அனுப்புங்கள். இப்படி ஒரு படம் இருக்கிறது தெரிந்தால் இந்த ஜமீனுக்கே புகழ் உண்டாகும்' என்ருச் ஒருவர். . . .

அதெல்லாம் யாரைய கேட்டார்கள்? இதை மறு படியும் உருவாக்க முடியுமா?’ என்று ஜமீன்தார் வின