பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 - கலைச் செல்வி

வினர். எல்லோரும் கையை விரித்து விட்டார்கள். காமைய நாயக்கர் மனம் தளரவில்லை. எங்கெங்கே ஒவியர் கள் இருக்கிருர்களோ அவர்களுக்கெல்லாம் எழுதி வரு வித்துக் காட்டினர். “இந்த மாதிரி இந்தக் காலத்தில் யார் எழுதுகிரு.ர்கள்? இப்போது போட்டோகிராபி வந்து விட்டதே' என்று சொல்லித் தங்கள் கையாலாகாத் திறமையைப் பலர் வெளிப்படுத்திவிட்டுப் போளுர்கள். கடைசியில் ஒரு சித்திரகாரர் வந்தார்; இந்திய ஒவிய முறையில் சித்திரம் எழுதுபவர். அவர் படத்தைப் பல பல கோணங்களில் வைத்துப் பார்த்தார்; கண்ணுக்கருகே வைத்துப் பார்த்தார்; தாத்தில் வைத்துக் கவனித்தார். எல்லாம் பண்ணிவிட்டு ஜமீன்தாரிடம் பேசலானுர்.

“இந்தச் சித்திரத்தின் அருமையை இந்தக் காலத்தில் உள்ள முட்டாள்கள் தெரிந்துகொள்வது கஷ்டம். நம் முடைய தேசத்துக்குச் சொக்தமான கலைகளையெல்லாம் நாம் இழந்துவிட்டோம். இந்தச் சித்திரக் கல்ை இருக் கிறதே, இதைப் போலச் சீர்கெட்டழிந்து போனது வேறில்லை. போட்டோப் படத்தைப் பார்த்துக் கூத்தாடிப் பரிசளிக்கும் காலம் இது. போட்டோக் கருவி உயிரற்ற யந்திரமாக இருந்து, உயிருள்ள பதார்த்தங்களின் உயிரற்ற கிழலைக் காட்டி ஏமாற்றுகிறது. அவர்களுக்கு உயிருள்ள சித்திரத்தின் அருமை தெரியவே தெரியாது. இந்தச் சித்திரம் இருக்கிறதே, இது இப்போது சின்னபின்ன மாகத்தானே இருக்கிறது? ஆலுைம் இதில் ஜீவன் இருக் கிறது. இது என்ைேடு பேசுகிறது. இந்த வர்ணங்களைப் பாருங்கள்: இப்படிப்பட்ட வர்ணம் இந்தப் பிருதிவி முழுவதும் தேடினலும் கிடைக்காது. பாரத தேசத்தில் உண்டான வர்ணம் இது; இதற்கு அழிவே இல்லை. இந்த